நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் போக்குவரத்து சேவையை சீர்ப்படுத்த நடவடிக்கை

07 Sep, 2026 | 03:32 PM
image

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் பயணிகளுக்குச் சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை உறுதிசெய்யும் நோக்கில், பேருந்து சேவை வழங்குநர்களுக்கு நுவரெலியா போக்குவரத்துப் பொலிஸாரும் மத்திய மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையும் பல கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.  

இன்று திங்கட்கிழமை (07), நுவரெலியா பிரதேச போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளாலும் மத்திய மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் வீதி ஆய்வாளர்களாலும் நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் தனியார் பேருந்துகள் திடீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

உள்நாட்டுப் பேருந்து சேவைகளை மேலும் முறைப்படுத்தி, பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்காக முக்கிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்குப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.  

பொலிஸார் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்

பேருந்து தரிப்பிடத்திற்குள் ஒதுக்கப்பட்ட பெட்டிகளுக்குள் மட்டுமே பேருந்துகளைச் சரியாக நிறுத்த வேண்டும்.

வீதியின் நடுவில் பேருந்துகளை நிறுத்தக் கூடாது. பயணிகள் பாதுகாப்பாக ஏறி, இறங்கும் வரை பேருந்தை முழுமையாக நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.

அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள், தடைசெய்யப்பட்ட ஒலியெழுப்பிகள் (Horns) மற்றும் அதிக சத்தத்தை உண்டாக்கும் உதிரிபாகங்களைப் பயன்படுத்துவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட நேர அட்டவணையின்படி பேருந்துகளைத் தரித்து நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். அத்துடன், பயணிகளுக்குத் தேவையான சரியான பயணத் தகவல்கள் மற்றும் வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.

பேருந்து தரிப்பிடத்திற்கு வெளியே சட்டவிரோதமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வதைத் தவிர்த்து, அவர்களின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

அறிவுறுத்தல்கள் மற்றும் வீதி போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்துகள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு எதிராகத் தாமதமின்றி கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் எச்சரித்துள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது மோதிய சொகுசு...

2026-10-10 15:26:47
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு...

2026-10-10 16:26:27
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01
news-image

2027இல் முக்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார...

2026-10-10 14:54:47
news-image

போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபரின் 3.5...

2026-10-10 14:30:02
news-image

அனோஜன் வழக்கு : சவூதி உயர்...

2026-10-10 13:16:59