மண்சரிவினால் பாதிக்கப்பட்டது வீதி: பொலிஸ் வாகனங்களில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்களும் ஆசிரியர்களும்!

07 Sep, 2026 | 03:14 PM
image

புதிய கல்வியாண்டு தொடங்கியதையடுத்து, இன்று (07) திங்கட்கிழமை பாடசாலைக் குழந்தைகளும் ஆசிரியர்களும் பொலிஸ் வாகனங்களில் பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் கொத்மலையில் பதிவாகியுள்ளது.

தித்வா புயல் மற்றும் கடந்த ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் பெய்த கனமழை காரணமாகக் கொத்மலை - கம்பளை பிரதான வீதியின் பனங்கம்மன பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வீதி வெடிப்புகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பனங்கம்மன பகுதியிலிருந்து கொத்மலை புதுநகரிலுள்ள காமினி திசாநாயக்க பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் ஆசிரியர்களும் பேருந்து சேவை இன்மையால் மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

வீதி சேதமடைந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தற்காலிக மரக்கட்டைகளைப் பயன்படுத்தி மிகவும் ஆபத்தான முறையிலேயே மண்சரிவுப் பகுதியைக் கடந்து வருகின்றனர்.

இந்நிலையைக் கருத்திற்கொண்டு, கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ஆய்வாளர் இந்திகா லலித் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தங்களது இரண்டு பொலிஸ் வாகனங்களைப் பயன்படுத்தி, மண்சரிவுப் பகுதியிலிருந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதுகாப்பாகப் பாடசாலைக்குக் கொண்டு சேர்த்து உதவினர்.

இது தொடர்பில் கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இலங்கை போக்குவரத்துச் சபையின் கொத்மலை பணிமனை மேலாளருடன் கலந்துரையாடியுள்ளார்.

அதற்கமைய, இன்று திங்கட்கிழமை (07) பிற்பகல் முதல் கொத்மலை நியூ டவுனிலிருந்து மண்சரிவு ஏற்பட்ட பகுதி வரை பேருந்து சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தீவிர வெப்பம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-10-10 17:47:10
news-image

நாடு முழுவதும் பொலிஸ் விசேட நடவடிக்கை...

2026-10-10 17:12:39
news-image

பியகம தொகுதியில் 10 இலட்சம் ரூபா...

2026-10-10 17:40:15
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்...

2026-10-10 17:51:25
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; சம்பவத்துடன்...

2026-10-10 16:58:42
news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது திட்டமிட்டு மோதிய...

2026-10-10 17:06:52
news-image

யக்கல - கிரிக்கித்தமுல்ல பகுதியில் கசிப்புடன்...

2026-10-10 16:39:25
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34