அரசாங்கத்தினால் 46 மில்லியன் ரூபா செலவில் முத்துராஜவெலவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் வரையாக எரிபொருள் குழாய்கள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்.
இத்திட்டம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
'இத்திட்டத்தின் மூலம் வீமானங்களுக்கு நிரப்பப்படும் எரிபொருளின் அளவு விகிதம் அதிகரிக்கப்படும். தினமும் 1.6 மில்லியன் லீற்றர் எரிபொருள் நிரப்பப்படுகின்றது.
ஆனால் இத்திட்டத்தின் மூலம் 2020 ஆண்டு 2 மில்லியன் லீற்றர் எரிபொருள் விமானங்களுக்கு விநியோகிக்க முடியும். மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் 3 மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகிக்க முடியும்.
புதிய எரிபொருள் விநியோகக் குழாய் பாதைகள் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வழியாக அமையவுள்ளது.
இவ்வழியினூடாக பொருத்தப்படவுள்ள எண்ணெய்க் குழாய்கள் மூலமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய எண்ணெய்க் குதங்களுக்கு எரிபொருளை நிரப்பப்ப முடியும். இந்தப் புதிய எரிபொருள் விநியோகப் பாதையானது 20 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டது. முன்னைய அமைச்சரின் திட்டத்தில் இருந்த 23.6 கிலோமீற்றர் தூரத்தை விட இது குறைவாகும்.
இந்த திட்டத்தின் மூலம் எமக்கு புகையிரதம் மற்றும் எண்ணெய் பவுஸர்களின் தேவைப்பாடு இல்லாமல் போகும். இதனால் எமது நிறுவனத்துக்கு 46 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீதமாகும். இந்த திட்டத்திற்கான நிதி மற்றும் செலவீனங்கள் அனைத்தும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் கையாளப்படவுள்ளது. இதனால் திறைசேரிக்கு எவ்வித சுமையும், பாதிப்பும் ஏற்படாது. அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தவுடன் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்தென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM