செவனகல சீனித்தொழிற்சாலை வேலைநிறுத்தத்தால் ரூ.250 மில்லியன் நட்டம்

Published By: Digital Desk 2

07 Sep, 2026 | 01:09 PM
image

(நமது நிருபர்)

ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக செவனகல சீனித்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டமையால் சுமார் 250 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சிலோன் சர்க்கரை நிறுவனத்தின் தலைவர் அதுல குமார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

செவனகல சீனித்தொழிற்சாலையின் ஊழியர்கள் ஓகஸ்ட் 25ஆம் திகதி முதல் பணிக்கு திரும்பியிருந்த போதிலும், தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பவில்லை. 

இதன் காரணமாக உற்பத்தி உள்ளிட்ட ஆலையின் பல்வேறு செயற்பாடுகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருக்கின்றன. செவனகல சீனித்தொழிற்சாலையை ஓகஸ்ட் 29ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதனால் உற்பத்தி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண்பதற்காக தொழில்துறை அமைச்சில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

குறித்த பேச்சுவார்த்தையின் போது ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு காண்பதற்கும் இருதரப்பினருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

இதனையடுத்து, செப்டெம்பர் 5ஆம் திகதி முதல் செவனகல சீனித்தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் முழுமையாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

எனினும் குறித்த வேலைநிறுத்தம் மற்றும் தற்காலிக மூடல் காரணமாக ஏற்பட்ட நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் காலங்களில் உற்பத்தி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக சிலோன் சர்க்கரை நிறுவனத்தின் தலைவர் அதுல குமார குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; சம்பவத்துடன்...

2026-10-10 16:58:42
news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது திட்டமிட்டு மோதிய...

2026-10-10 17:06:52
news-image

யக்கல - கிரிக்கித்தமுல்ல பகுதியில் கசிப்புடன்...

2026-10-10 16:39:25
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு...

2026-10-10 16:26:27
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01
news-image

2027இல் முக்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார...

2026-10-10 14:54:47