(நமது நிருபர்)
பல்கலைக்கழகங்களில் ஏற்படும் கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிட வெற்றிடங்களை நிரப்பும் வகையில், பணியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மாதாந்தம் மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக உபகுழு, பணியாளர் ஆட்சேர்ப்பு தொடர்பில் மாதாந்தம் மீளாய்வு செய்ய தீர்மானித்துள்ளது, கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்களை அதிகரிப்பதற்கான அனுமதி ஏற்கனவே பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் பணியிட வெற்றிடங்கள் கண்டறியப்படும் சந்தர்ப்பங்களில், மேலதிக ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படுவதோடு, ஒவ்வொரு பல்கலைக்கழகத்துடனும் தனித்தனியாக ஆட்சேர்ப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன.
இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கணிசமான நிதி செலவிடப்பட்டுள்ளன.
விடுதிகள், பீடக் கட்டடங்கள், விஞ்ஞான ஆய்வுகூடங்கள் உள்ளிட்ட வசதிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டும் மேலதிக பீடக் கட்டிடங்கள் மற்றும் விடுதிகளை அமைப்பதற்கு வரவு–செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கலாநிதிப் பட்டம் பெற்ற பாடசாலை ஆசிரியர்களுக்கு எதிர்காலத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும் என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM