இந்தோனேசியாவின் சுண்டா நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள 'அனக் கிரக்கடோவா' எரிமலையிலிருந்து தொடர்ந்து வெளியேறும் அடர்ந்த சாம்பல் புகை காரணமாக, தலைநகர் ஜகர்த்தாவிற்குச் சேவை வழங்கும் இரு பிரதான விமான நிலையங்கள் உட்பட 08 விமான நிலையங்கள் திங்கட்கிழமை (07) காலை வரை மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு முதல் சீறி வரும் இந்த எரிமலையின் சாம்பல் மேகங்கள் ஜகர்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சூழ்ந்துள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜகர்த்தாவின் பிரதான சுகார்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6:00 மணி வரை இடைநிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால் சுமார் 170,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் 18 விமானங்கள் திங்கட்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், செவ்வாய்க்கிழமை அதிகாலை புறப்படவிருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாறிவரும் வானிலை காரணமாக எரிமலைச் சீற்றம் எப்போது தணியும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியாது எனப் போக்குவரத்து அமைச்சர் டுடி பூர்வகாந்தி தெரிவித்துள்ளார்.
ஜகர்த்தா மற்றும் லம்பங் பிராந்தியங்களில் மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இணைய வழி கற்றல் முறையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாம்பல் புகையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசங்களை அணியுமாறு பேரனர்த்த முகாமைத்துவ முகமை வலியுறுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8:23 மணியளவிலும் அனக் கிரக்கடோவா எரிமலையில் புதிய வெடிப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM