தமிழ் நடிகர்களில் பன்முகத்திறமைக் கொண்டவர்களின் பட்டியலில் நடிகர் பிரசாந்திற்கும் இடமுண்டு. இந்நிலையில் ஒரேயொரு கொமர்ஷல் வெற்றிக்காக இவர் கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 

தன்னுடைய தந்தை நடித்த மம்பட்டியான் படத்தினை மீண்டும் இப்போதுள்ள சூழலுக்கேற்றவாறு திரைக்கதை அமைத்து நடித்தார். அதற்கு முன்னர் கலைஞரின் கதை வசனத்தில் உருவான பொன்னர் சங்கர் என்ற வரலாற்று படத்தில் நடித்தார். பிறகு புலன் விசாரணை என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். மீண்டும் அறிமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் சாஹசம் என்ற படத்தில் நடித்தார். ஆனாலும் கொமர்ஷல் ஹிட் கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கையில் தற்போது 2007 ஆம் ஆண்டில் ஹிந்தியில் வெளியான ‘ஜோனி கத்தார்’ (Johny Gaddar) என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி அதனை சென்டிமெண்ட்டிற்காக ரஜினி பட டைட்டிலான ‘ஜானி ’ என்று வைத்து நடித்திருக்கிறார்.  அவருடைய இந்த வித்தியாசமான முயற்சிக்கு இந்த முறை கண்டிப்பாக வெற்றிக்கிடைக்கும் என்றே தெரியவருகிறது.

இந்த படம் ஹிந்தியில்  பெரிய வெற்றியைப் பெற்றதுடன் விமர்சன ரீதியிலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்ற படம். இந்த மலையாளத்திலும், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றியைப் பெற்றிருப்பதால் இந்த முறை ‘ஜானி ’யை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.

இதில் பிரசாந்துடன் சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடிக்க, பிரபு, ஆனந்தராஜ், அஷ்தோஷ் ராணா என பல முன்னணி கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள். இதனை அறிமுக இயக்குநர் வெற்றிச் செல்வன் இயக்குகிறார்.

தகவல் : சென்னை அலுவலகம்