ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை இறுதி இடத்தை உறுதி செய்தது

07 Sep, 2026 | 09:05 AM
image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) இரவு நடைபெற்ற பி குழு போட்டியில் பங்களாதேஷிடம்   பலத்த அச்சுறுத்தலை எதிர்கொண்ட இலங்கை 4 பந்துகள் மீதம் இருக்க 4 விக்கெட்களால் வெற்றிகொண்டு மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட இலங்கைக்கு ஹர்ஷித்த சமரவிக்ரமவின் திறமையான துடுப்பாட்டம் கைகொடுத்தது.

இந்த வெற்றியுடன் இந்தியாவை அரை இறுதியில் எதிர்த்தாடுவதை இலங்கை தவிர்த்துக் கொண்டது.

இந்தப் போட்டியில் பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 115 ஓட்டங்கனை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பவர் ப்ளே நிறைவின்போது   இலங்கை   3 விக்கெட்களை இழந்து 29 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

அணித் தலைவி சமரி அத்தபத்து (1) முதலாவது ஓவரிலும் இமேஷா துலானி (12) மூன்றாவது ஓவரிலும் சஞ்சனா காவிந்தி (9) ஆறாவது ஓவரிலும் களம் விட்டகன்றனர்.

தொடர்ந்து விஷ்மி குணரட்ன (9), கவிஷா டில்ஹாரி (3) ஆகிய இருவரை 3 ஓட்டங்கள் இடைவெளியில் இழந்ததால் இலங்கை பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டது. (44 - 5 விக்.)

ஆனால், மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய சிரேஷ்ட வீராங்கனை ஹர்ஷித்தா சமரவிக்ரம 6ஆவது விக்கெட்டில் நிலக்ஷிகா சில்வாவுடன் 38 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் கௌஷினி நுதியங்கனாவுடன் 33 ஓட்டங்களையும் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.

ஹர்ஷித்தா சமரவிக்ரம 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களையும் நிலக்ஷிகா சில்வா 18 ஓட்டங்களையும் கௌஷினி நுதியங்கனா ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மருபா அக்தர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 114 ஓடடங்களைப் பெற்றது.

முன்வரிசை வீராங்கனைகளான டிலாரா அக்தர் (26), ஜுவாரியா பிர்தௌஸ் (14), சோபனா மோஸ்தரி (34) ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்களின் உதவியுடன் பங்களாதேஷ் ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள்...

2026-10-09 23:39:40
news-image

லஹிருவின் அரைச் சதத்தை பர்ஹான், சதாகத்...

2026-10-09 23:32:54
news-image

துடுப்பாட்டத்தில் லஹிரு அபாரம்;  பாகிஸ்தானுக்கு 183...

2026-10-09 20:33:44
news-image

பாகிஸ்தானுடனான முதலாவது ரி20இல் இலங்கை முதலில்...

2026-10-09 18:21:16
news-image

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20...

2026-10-09 16:17:12
news-image

டிபெண்டர்ஸ் - நியூ யங்ஸ் போட்டியுடன்...

2026-10-09 15:16:43
news-image

பெடரேஷன் கிண்ண கால்பந்தாட்டத்தில் 25 பயிற்சியகங்களைச்...

2026-10-08 21:44:25
news-image

குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின்...

2026-10-08 16:20:42
news-image

தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட்...

2026-10-08 12:37:22
news-image

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள...

2026-10-07 06:36:13
news-image

மொரிஷியஸை 3 - 2 என...

2026-10-06 03:51:43
news-image

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் மீண்டும்...

2026-10-05 18:56:28