இன்றைய வானிலை 

Published By: Vishnu

07 Sep, 2026 | 05:59 AM
image

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று  இன்று மதியம் சுமார் 12.08 மணியளவில் காலி, அங்குளுகக, இமதுவ, தெலிச்சவில, யட்டியான மற்றும் தங்கல்ல போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில்  அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்  

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

முல்லைத்தீவு தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில்   தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான அத்துடன் 

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் விரைவான தீர்மானம்...

2026-10-12 13:46:56
news-image

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க...

2026-10-12 13:49:45
news-image

பாடசாலைப் பொருட்கள், அத்தியாவசிய உணவுகளுக்கு வற்...

2026-10-12 17:26:58
news-image

ஞானசார தேரரின் காவியுடை விவகாரம்: அரசாங்கத்தை...

2026-10-12 17:38:36
news-image

மஹிந்த ராஜபக்‌ஷ திடீர் உடல்நலக் குறைவால்...

2026-10-12 17:23:28
news-image

இராமநாதன் அர்ச்சுனாவின் எம்.பி. பதவிக்கு எதிரான...

2026-10-12 22:12:08
news-image

கொரிய தன்னார்வ அமைப்பின் விசேட பிரதிநிதிகள்...

2026-10-12 22:07:54
news-image

எமது அரசாங்கத்தில் பாதாள உலகக் குழுக்களுக்கு...

2026-10-12 14:10:40
news-image

அரசாங்கம் அரசியல் பழிவாங்கலுக்கும் விமர்சனங்களுக்கும் முன்னுரிமையளித்துள்ளது...

2026-10-12 12:59:44
news-image

சிறைச்சாலை நிலையியற் கட்டளைகளை மீளாய்வு செய்யுமாறு...

2026-10-12 17:39:35
news-image

மட்டக்களப்பில் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த...

2026-10-12 19:42:21
news-image

கலாலயா கலாசார மற்றும் இளைஞர் அபிவிருத்தி...

2026-10-12 18:40:21