கொஸ்கொடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) காலை இனந்தெரியாத நபர்கள் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ள போதிலும், துப்பாக்கி இயங்காத நிலையில் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொஸ்கொடை, நானோட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும், பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருமான ‘கொஸ்கொட தாரக்க’வுடன் நெருங்கிய தொடர்புடைய பெண்ணொருவரை இலக்குவைத்தே இந்தத் துப்பாக்கிச் சூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தின் போது வீட்டிலிருந்த எவருக்கும் காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை. 9 எம்.எம். ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை குறித்த பெண்ணை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும், துப்பாக்கி இயங்காமையால் அவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM