ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நான்காவது அணியாக நுழைந்தது ரெட் ஸ்டார்

Published By: Vishnu

07 Sep, 2026 | 03:06 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற சுப்பர் லீக் சம்பியன்ஷிப் போட்டியில் ரட்னம் கழகத்தை 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பேருவளை ரெட் ஸ்டார் கழகம் வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட நான்காவது அணியாக ரெட் ஸ்டார் தகுதி பெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டியில் இலகுவாக வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் ரெட் ஸ்டார் கழகம் விளையாடியதை அவதானிக்க முடிந்தது.

ஆனால், போட்டியில் நேரம் செல்ல செல்ல ரட்னம் கழகம் திறமையாக விளையாடி ரெட் ஸ்டார் கழகத்துக்கு அழுத்தத்தைக் கொடுத்த வண்ணம் இருந்தது.

ரட்னம் கழகத்துக்கு கோல் போடுவதற்கு வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதன் முன் கள கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கோட்டை விட்டனர்.

அதேவேளை, ரெட் ஸ்டார் கழகத்துக்கு கோல் போடுவதற்கு கிடைத்த குறைந்தது 3 இலகுவான வாய்ப்புகள் உட்பட  6 வாய்ப்புகள் கோட்டை விடப்பட்டன.

எனினும், போட்டி இடைவேளையை நெருங்கிக்கொண்டிருந்தபோது ரட்னம் கழக பின்கள வீரர் பிரான்சிஸ் சிக்கேரூபாவின் அசிரத்தை காரணமாக ரெட் ஸ்டார் கழகம் முதலாவது கோலை போட்டது.

அசண்டே ஜெரோம் பரிமாறிய பந்தை சுப்புன் தனஞ்சய  கோலாக்கி ரெட் ஸ்டார் கழகத்தை இடைவேளையின்போது 1 - 0 என முன்னிலையில் இட்டார்.

தொடர்ந்து 70ஆவது நிமிடத்தில் ரெட் ஸ்டார் கழகம் சார்பாக அசண்டே ஜெரோம் இரண்டாவது கோலை போட்டார்.

உபாதையீடு நேரத்தில் மாற்று வீரர் மொஹமத் ரிப்கான் கோல் போட்டு ரெட் ஸ்டார் கழகத்தின் கோல் எண்ணிக்கையை 3ஆவது உயர்த்தினார்.

அதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் போட்டி முடிவுக்கு  வந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள்...

2026-10-09 23:39:40
news-image

லஹிருவின் அரைச் சதத்தை பர்ஹான், சதாகத்...

2026-10-09 23:32:54
news-image

துடுப்பாட்டத்தில் லஹிரு அபாரம்;  பாகிஸ்தானுக்கு 183...

2026-10-09 20:33:44
news-image

பாகிஸ்தானுடனான முதலாவது ரி20இல் இலங்கை முதலில்...

2026-10-09 18:21:16
news-image

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20...

2026-10-09 16:17:12
news-image

டிபெண்டர்ஸ் - நியூ யங்ஸ் போட்டியுடன்...

2026-10-09 15:16:43
news-image

பெடரேஷன் கிண்ண கால்பந்தாட்டத்தில் 25 பயிற்சியகங்களைச்...

2026-10-08 21:44:25
news-image

குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின்...

2026-10-08 16:20:42
news-image

தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட்...

2026-10-08 12:37:22
news-image

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள...

2026-10-07 06:36:13
news-image

மொரிஷியஸை 3 - 2 என...

2026-10-06 03:51:43
news-image

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் மீண்டும்...

2026-10-05 18:56:28