டெல்லியில் 06 மாடி விடுதி கட்டிடம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் பல மாணவர்கள் சிக்கித் தவிப்பு!

Published By: P. Saranya

06 Sep, 2026 | 07:21 PM
image

இந்தியாவின் தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள 6 மாடிகளைக் கொண்ட மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்துள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள 'ஹோஸ்டல் டேஸ்' என்ற இந்த 75 படுக்கைகள் கொண்ட ஆண்கள் விடுதி இடிந்து விழுந்ததில், அங்கு தங்கியிருந்த பல மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுவரை 06 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ள போதிலும், 2 பேர் மீட்கப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள சில மாணவர்கள் தங்கள் தொலைபேசிகள் வாயிலாக உள்ளிருந்து உதவி கேட்டு அழைப்பதாக உள்ளூர் பிஜேபி எம்.எல்.ஏ அனில் சர்மா தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுமார் 50 மாணவர்கள் விடுதிக்குள் இருந்திருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு வாகனங்கள், அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் மற்றும் பேரனர்த்த மீட்புப் படைகள் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை...

2026-10-10 15:22:21
news-image

ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய...

2026-10-10 11:48:10
news-image

டில்லியைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் :...

2026-10-10 10:56:17
news-image

தான்சானியாவில் கோர விபத்து : லொறியுடன்...

2026-10-10 13:38:07
news-image

நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு...

2026-10-10 10:32:12
news-image

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

2026-10-10 08:22:28
news-image

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக...

2026-10-09 16:41:49
news-image

ரியாத் விமான நிலையத் தாக்குதலில் விமானி...

2026-10-09 17:36:33
news-image

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

2026-10-09 15:14:41
news-image

தமிழக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக்...

2026-10-09 13:22:24
news-image

உக்ரைனில் பயணிகள் பேருந்துகள் மீது ரஷ்யா...

2026-10-09 12:01:19
news-image

அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின்...

2026-10-09 12:19:33