ஆற்றை தனியாளாக சுத்தம் செய்தவருக்கு சர்வதேச நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

06 Sep, 2026 | 04:44 PM
image

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் பியாவோராவில் முற்றிலும் மாசடைந்து குப்பைக் காடாகக் காட்சியளித்த அஜ்னார் ஆற்றை, அரசாங்கம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் உதவியின்றி 20 வயதான இளைஞர் ஒருவர் தனது சொந்த முயற்சியால் தனியாளாகச் சுத்தம் செய்து சாதனை படைத்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுரேந்திர சிங் சவுத்ரி என்ற இந்த இளைஞர், சமூக ஊடகங்களில் ‘பிட்டு தபாஹி’ எனப் பிரபலமாக அறியப்படுகிறார்.

அரசாங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் எனக் காத்திருக்காமல், கடந்த ஜனவரி மாதம் முதல் தினமும் பல மணி நேரம் ஆற்றில் இறங்கி பிளாஸ்டிக் கழிவுகள், பாசிகள் மற்றும் இரசாயனக் கழிவுகளை அகற்றி வந்துள்ளார்.

நச்சுத்தன்மை கொண்ட நீரில் தொடர்ந்து பணியாற்றியதால், அவரது கை, கால்களில் கடுமையான தோல் ஒவ்வாமை ஏற்பட்ட போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் தனது பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு ஆற்றின் பெரும் பகுதியைச் சுத்தம் செய்துள்ளார்.

இவரது அசாத்திய முயற்சியை இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியதுடன், பிட்டுவின் நற்செயல் தொடர்பான காணொளியை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்து அவரை ஊக்கப்படுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பிட்டுவின் பணிகள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, உலகளவில் கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில், நெதர்லாந்தைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் அமைப்பான ‘தி ஓஷன் கிளீனப்’ நிறுவனத்தின் நிறுவுநரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான போயன் ஸ்லாட், பிட்டுவின் அர்ப்பணிப்பைக் கண்டு வியந்து, அவருக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வந்துள்ளார்.

போயன் ஸ்லாட் வெள்ளிக்கிழமை தனது எக்ஸ் தளப் பதிவில், “எங்களுடன் வந்து இணைந்து பணியாற்றுங்கள்” எனக் குறிப்பிட்டு பிட்டுவுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

எவ்வித எதிர்பார்ப்புமின்றி, குறைந்த வசதிகளுடன் தனது சொந்த முயற்சியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போராடிய ஒரு கிராமத்து இளைஞருக்கு, சர்வதேச அளவில் அறியப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளமை சமூக ஊடகங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை...

2026-10-10 15:22:21
news-image

ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய...

2026-10-10 11:48:10
news-image

டில்லியைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் :...

2026-10-10 10:56:17
news-image

தான்சானியாவில் கோர விபத்து : லொறியுடன்...

2026-10-10 13:38:07
news-image

நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு...

2026-10-10 10:32:12
news-image

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

2026-10-10 08:22:28
news-image

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக...

2026-10-09 16:41:49
news-image

ரியாத் விமான நிலையத் தாக்குதலில் விமானி...

2026-10-09 17:36:33
news-image

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

2026-10-09 15:14:41
news-image

தமிழக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக்...

2026-10-09 13:22:24
news-image

உக்ரைனில் பயணிகள் பேருந்துகள் மீது ரஷ்யா...

2026-10-09 12:01:19
news-image

அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின்...

2026-10-09 12:19:33