225 பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்கள் ஆய்வு

06 Sep, 2026 | 04:14 PM
image

(நமது நிருபர்)

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரினாலும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ள 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்கள் தொடர்பில் முழுமையான ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு ஜனநாயக மறுசீரமைப்பு  மற்றும் தேர்தல்கள் தொடர்பான ஆய்வு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த ஆய்வின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருமானம் சொத்துக்கள் பொறுப்புக்கள் மற்றும் ஏனைய நிதி முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களை அடையாளம் காண்பதற்காக குறித்த பிரகடனங்கள் ஒப்பீடு செய்யப்படவுள்ளன.

2024 பாராளுமன்றத் தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் பிரசார செலவின அறிக்கைகளுடன் இந்த சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களில் உள்ளக்கப்பட்டுள்ள தகவல்களை ஒப்பீடு செய்வதும் இங்கு இடம்பெறும்.

2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இலங்கை கவனம் செலுத்தியுள்ள தருணத்தில் இந்த ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல்கள் தொடர்பான ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.

வேட்பாளர்கள் தேர்தல் பிரசார காலத்தில் வெளிப்படுத்திய தகவல்கள் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பிரகடனப்படுத்திய நிதித் தகவல்களுடன் முரண்பாடுகள் ஏதுமின்றி பொருந்துகின்றதா என்பது குறித்து இங்கு தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வானது தேர்தல் பிரசார செலவினங்கள் மற்றும் வருமான வெளிப்படுத்தல்களை பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களுடன் தொடர்புபடுத்தி நாட்டின் அரசியல் நிதியளிப்பு மற்றும் அரச துறையின் வெளிப்படைத்தன்மை குறித்த சான்றுகளுடன் கூடிய மதிப்பீட்டை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படும் சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களை தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்கு இந்த ஆய்வின் மூலம் உருவாக்கப்படும் முறையியல் மற்றும் தரவுத்தளத்தைப் பயன்படுத்த முடியும் என்பதுடன் மக்கள் பிரதிநிதிகளின் நிதிசார் தகவல்களின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் தற்போது நிலவும் உரையாடலுக்கும் அது பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவு, இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில்...

2026-10-08 20:32:46
news-image

கையகப்படுத்திய சகல தனியார் காணிகளையும் விரைவில்...

2026-10-08 17:06:21
news-image

பழிவாங்கவேண்டிய தேவை எமக்கு இல்லை ;...

2026-10-08 17:20:55
news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ கைது அரசியல் தேவைக்காக...

2026-10-08 17:21:37
news-image

ஊழல் விவகாரத்தில் எதிர்க்கட்சியின் இரட்டை நிலைப்பாடு...

2026-10-08 17:03:17
news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ, நாமல் சிறையில்! ;...

2026-10-08 20:28:28
news-image

2500 ஆண்டுகால பௌத்த பாரம்பரியத்தின் மீது...

2026-10-08 17:01:03
news-image

பிரபாகரனாலும் ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை...

2026-10-08 14:34:02
news-image

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட...

2026-10-08 21:48:37
news-image

செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் உள்ளக...

2026-10-08 17:53:12
news-image

ஊழல் எதிர்ப்பு சட்டத் திருத்தம் அரச...

2026-10-08 16:59:39
news-image

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் வாக்கெடுப்பின்றி...

2026-10-08 21:31:22