மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ் எவ்சியை வெற்றிகொண்டது புளூ ஸ்டார்

06 Sep, 2026 | 03:08 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (05) மாலை நடைபெற்ற டிபெண்டர்ஸ் அணிக்கு எதிரான தீர்மானம் மிக்க சுப்பர் லீக் சம்பியன்ஷிப் போட்டியில் மத்தியஸ்தரின் சில தவறான தீர்ப்புகளினால் நெருக்கடிக்கு உள்ளான நடப்பு சம்பியன் களுத்துறை புளூ ஸ்டார் கழகம் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இறுக்கமான வெற்றியை ஈட்டியது.

இந்த வெற்றியுடன் தனது சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை புளூ ஸ்டார் சற்று அதிகரித்துக் கொண்டது.

எஞ்சியுள்ள ரட்னம் கழகத்துக்கு எதிரான போட்டியில் புளூ ஸ்டார் வெற்றி பெறும் பட்சத்தில் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை உறுதிசெய்துகொள்ளும்.

டிபெண்டர்ஸ் எவ்சி அணியுடனான போட்டியில் கடும் சவாலை எதிர்கொண்ட புளூ ஸ்டார் கழகம், மொஹமத் இஸாஸின் இரட்டை கோல்களின் உதவியுடன் வெற்றிபெற்றது.

போட்டியின் 30ஆவது நிமிடத்தில் அவ்தவ் ப்ரான்கி வலப்புறத்திலிருந்து தாழ்வாக பரிமாறிய பந்தை இஸாஸ் தரையில் வீழ்ந்தவாறு கோலாக்கி புளூ ஸ்டாரை முன்னிலையில் இட்டார்.

இடைவேளைக்குப் பின்னர் 56ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் ஜெறி ஒம்பேபே பரிமாறிய பந்தை மிகவும் இலாவகமாக தலையால் முட்டி  இஸாஸ்   தனது இரண்டாவது கோலை போட்டார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து புளூ ஸ்டார் பின்களத்தில் ஏற்பட்ட தவறை நன்கு பயன்படுத்தி டிபெண்டர்ஸ் எவ்சி சார்பாக சௌந்தரராஜ் அரவின்ராஜ் கோல் ஒன்றைப் போட்டார்.

இந்தப் போட்டியில் அவ்வப்போது அநாவசியமாக சில வீரர்களுக்கு மஞ்சள் அட்டையைக் காட்டிய மத்தியஸ்தர் சசன்க மதுசன்க, புளூ ஸ்டார் கழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிச்சயமான பெனல்டி ஒன்றை கொடுக்காமல் விட்டது புளூ ஸ்டார் வீரர்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியது.

மத்தியஸ்தரின் சில தீர்ப்புகள் திருப்தி அளிக்கவில்லை என போட்டியைக் கண்டு களித்த மற்றொரு அணியின் பயிற்றுநர் ஒருவரும் கால்பந்தாட்ட அதிகாரி ஒருவரும் தெரிவித்தனர்.

ரெட் ஸ்டார் எதிர் ரட்னம்

சுப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழைவதற்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி தேவைப்படும் பேருவளை ரெட் ஸ்டார் கழகம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள   சுப்பர் லீக் சம்பியன்ஷிப்   போட்டியில் ரட்னம் கழகத்தை எதிர்த்தாடவுள்ளது.

கொழும்பு சுகததாச அரங்கில் இப் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ரெட் ஸ்டார் கழகம் இதுவரை 3 வெற்றிகள், 2 வெற்றிதோல்வியற்ற முடிவுகள் என்ற பெறுபேறுகளுடன் 11 புள்ளிகளைப் பெற்று 5ஆம் இடத்தில் இருக்கிறது.

இன்றைய போட்டியில் ரெட் ஸ்டார் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தனது 7 போட்டிகளிலும் தோல்விகளைத் தழுவியுள்ள ரட்னம் கழகம் இன்றைய போட்டியில் தலைகீழ் முடிவை ஏற்படுத்த முயற்சிக்கும் என கருதப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள்...

2026-10-09 23:39:40
news-image

லஹிருவின் அரைச் சதத்தை பர்ஹான், சதாகத்...

2026-10-09 23:32:54
news-image

துடுப்பாட்டத்தில் லஹிரு அபாரம்;  பாகிஸ்தானுக்கு 183...

2026-10-09 20:33:44
news-image

பாகிஸ்தானுடனான முதலாவது ரி20இல் இலங்கை முதலில்...

2026-10-09 18:21:16
news-image

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20...

2026-10-09 16:17:12
news-image

டிபெண்டர்ஸ் - நியூ யங்ஸ் போட்டியுடன்...

2026-10-09 15:16:43
news-image

பெடரேஷன் கிண்ண கால்பந்தாட்டத்தில் 25 பயிற்சியகங்களைச்...

2026-10-08 21:44:25
news-image

குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின்...

2026-10-08 16:20:42
news-image

தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட்...

2026-10-08 12:37:22
news-image

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள...

2026-10-07 06:36:13
news-image

மொரிஷியஸை 3 - 2 என...

2026-10-06 03:51:43
news-image

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் மீண்டும்...

2026-10-05 18:56:28