நேபாளத்தில் மண்ணில் புதைந்த வீட்டிலிருந்து 10 நாட்களுக்குப் பின்னர் வயோதிபப் பெண் உயிருடன் மீட்பு!

Published By: Digital Desk 2

06 Sep, 2026 | 02:57 PM
image

நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த  64 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் 10 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நுவாகோட் மாவட்டத்தில் பகுதியளவில் மண்ணில் புதைந்திருந்த அவரது வீட்டின் நான்காவது மாடியில் அவர் உயிருடன் இருப்பதை நேபாள மீட்புப் படையினர் நேற்று சனிக்கிழமை (05) கண்டுபிடித்துள்ளனர்.

இதனை அடுத்து, மீட்புப் பணியாளர்கள் அவரை பாதுகாப்பாக மீட்டு,  சிகிச்சைக்காக ஹெலிக்கொப்டர் மூலம் திரிசூலியில் உள்ள நேபாள இராணுவத்தின் மைதிலி முகாமிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 

இதேவேளை, பேரழிவு ஏற்பட்டு பல நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இடிபாடுகளுக்குள் இருந்து மூதாட்டி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை...

2026-10-10 15:22:21
news-image

ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய...

2026-10-10 11:48:10
news-image

டில்லியைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் :...

2026-10-10 10:56:17
news-image

தான்சானியாவில் கோர விபத்து : லொறியுடன்...

2026-10-10 13:38:07
news-image

நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு...

2026-10-10 10:32:12
news-image

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

2026-10-10 08:22:28
news-image

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக...

2026-10-09 16:41:49
news-image

ரியாத் விமான நிலையத் தாக்குதலில் விமானி...

2026-10-09 17:36:33
news-image

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

2026-10-09 15:14:41
news-image

தமிழக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக்...

2026-10-09 13:22:24
news-image

உக்ரைனில் பயணிகள் பேருந்துகள் மீது ரஷ்யா...

2026-10-09 12:01:19
news-image

அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின்...

2026-10-09 12:19:33