நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உலக அழகு ராணி பட்டத்தை வென்ற டொமினிக்கன் குடியரசு

06 Sep, 2026 | 02:17 PM
image

வியட்நாமில் நஹா ட்ராங் நகரில் நடைபெற்ற 73ஆவது உலக அழகு ராணி இறுதிப்போட்டியில், டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மோலா 2026 ஆம் ஆண்டின் உலக அழகு ராணியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப்போட்டியில் 111 போட்டியாளர்கள் பங்கேற்றநிலையில், அவர்களை பின்னுக்குத் தள்ளி 2026 ஆம் ஆண்டுக்கான உலக அழகு ராணி பட்டத்தை டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 24 வயதான ஜோஹெய்ரி மோலா டொமிங்கஸ் வென்றுள்ளார்.

கடந்த, 2025ம் ஆண்டுக்கான 72வது உலக அழகு ராணிப் போட்டியில் வென்ற  தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒபல் சுஷாதா சுவாங்ஸ்ரீ வெற்றியாளரான ஜோஹெய்ரி மோலாவிற்கு மகுடம் சூடியுள்ளார்.

டொமினிக்கன் குடியரசு 44 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் உலக அழகு ராணி  பட்டத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கு முன்பு 1982-ம் ஆண்டு மரியாசெலா அல்வரெஸ் மூலம் உலக அழகி பட்டத்தை வென்றிருந்தது. இதன் மூலம் ஜோஹெய்ரி மோலா, டொமினிக்கன் குடியரசின் 2-வது உலக அழகியாகி  மகுடம் சூடி டொமினிக்கன் குடியரசினை பெருமைப்படுத்தியுள்ளார்

73ஆவது உலக அழகி இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தை  ஸ்பெயினின் எலிசபெத்தும், மூன்றாம் இடத்தை மலேசியாவின் டானுசியா செட்டியும் தெரிவாகி மகுடம் சூடியுள்ளனர்.

மேலும் இறுதிப்போட்டியில் விசேட விருந்தினர்கள் மற்றும் பொலிவூட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

ஜோஹெய்ரி மோலா 2026 ஆம் ஆண்டின் உலக அழகு ராணியாக  முடிசூடியமைக்கு  பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை...

2026-10-10 15:22:21
news-image

ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய...

2026-10-10 11:48:10
news-image

டில்லியைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் :...

2026-10-10 10:56:17
news-image

தான்சானியாவில் கோர விபத்து : லொறியுடன்...

2026-10-10 13:38:07
news-image

நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு...

2026-10-10 10:32:12
news-image

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

2026-10-10 08:22:28
news-image

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக...

2026-10-09 16:41:49
news-image

ரியாத் விமான நிலையத் தாக்குதலில் விமானி...

2026-10-09 17:36:33
news-image

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

2026-10-09 15:14:41
news-image

தமிழக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக்...

2026-10-09 13:22:24
news-image

உக்ரைனில் பயணிகள் பேருந்துகள் மீது ரஷ்யா...

2026-10-09 12:01:19
news-image

அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின்...

2026-10-09 12:19:33