அனைத்து விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளையும் உடன் வெளியிடுங்கள் : அநுர அரசிடம் பிரத்தானிய தமிழர் பேரவை வலியுறுத்து

Published By: Digital Desk 2

06 Sep, 2026 | 12:53 PM
image

(நமது நிருபார்)

முழுமையான வெளிப்படைத்தன்மையும் பாரபட்சமற்ற பொறுப்புக்கூறலும் அவசியமாகும், மக்களுக்கு இன்னமும் சென்றடையாத அனைத்து விசாரணை ஆணைக்குழுக்களின் இறுதி அறிக்கைகளையும், அவற்றின் அதிகாரப் வரம்புகளில் எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வித தாமதமுமின்றி உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அப்பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிக்கைகளை மறைத்து வைக்கும் அல்லது தாமதப்படுத்தும் சூழலில், ஒரு புதிய அரசியல் கலாசாரத்தையோ, நல்லாட்சியையோ அல்லது பொறுப்புக்கூறலையோ ஏற்படுத்துவதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

விசாரணைக் குழுக்கள் கண்டறிந்த உண்மைகளை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு முழுமையாக உண்டு. 

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உண்மையும் தீர்வும் கிடைக்கப் பெற வேண்டும். குற்றவியல் பொறுப்புகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், குற்றவாளிகள் அவர்களின் அரசியல் செல்வாக்கு அல்லது பதவி நிலையைக் கருதாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அதன் முந்தைய அரசாங்கங்களை விட சர்வதேச சமூகம் மற்றும் ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றால் சாதகமாகப் பார்க்கப்படுகிறது.

எனினும், பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரத்தில், ஜே.வி.பி தலைமையிலான நிர்வாகம் சிங்கள தேசியவாத சக்திகள் மற்றும் தனது சொந்தக் கட்சித் தோழர்களின் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அதிக எச்சரிக்கையுடன் செயற்படுவதாகத் தெரிகிறது.  

நீதியையும் பொறுப்புக்கூறலையும் தங்களுக்கு அரசியல் ரீதியாகச் சாதகமான நேரத்தில் படிப்படியாகக் கையாளவே அரசாங்கம்  முயற்சி செய்கிறது என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது. பொறுப்புக்கூறல் என்பது எதிராளிகளுக்கு எதிரான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படக் கூடாது.  

வரலாற்றுப் பின்னணியும் நலன்களின் முரண்பாடும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதன்மைப் பங்காளியான ஜே.வி.பி. மீதான வரலாற்றுப் பதிவுகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும்:  2002 நோர்வேயின் அமைதி முயற்சிக்கு எதிர்ப்பு, சுனாமி நிவாரணத்திற்கான ஒப்பந்தத்தை எதிர்த்தமை, வடக்கு-கிழக்கு இணைப்பிற்கு எதிரான நகர்வுகள் மற்றும் யுத்தத்தை மீண்டும் தொடங்குவதற்கான அரசியல் அழுத்தங்களை ஜே.வி.பி வழங்கியது.

பின்னநாட்களில் பாதுகாப்புப் படைகளில் இணைந்த முன்னாள் ஜே.வி.பி உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சிக் காலத்தில் இடம்பெற்ற கொடூரமான குற்றங்கள், கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் குறித்து எந்தவொரு விசாரணையையும் ஜே.வி.பி தலைமையிலான அரசு முன்னெடுக்கவில்லை.  

கடந்த கால வன்முறைகளில் குற்றம் சாட்டப்பட்ட பின்னணியைக் கொண்டிருப்பதால், ஒரு சர்வதேச நீதிக்கான வழிமுறைக்கு உட்படுவதில் ஆளும் நிர்வாகத்திற்கு நலன்களின் முரண்பாடு எழுகிறது.

புதிய அரசியல் கலாசாரத்திற்கான சோதனைமுந்தைய அரசாங்கங்களைப் போல விசாரணைகளை மூடி மறைப்பது புதிய அரசியல் கலாச்சாரமாகாது.

அரசியல் எதிரிகளின் குற்றங்களை அம்பலப்படுத்துவது மட்டுமின்றி, தன் சொந்தக் கடந்த காலத்தின் மீதும் உண்மையை எதிர்கொள்ளத் தயாக இருப்பதே உண்மையான பொறுப்புக்கூறலாகும். 

தவறுகள் எதுவும் செய்யப்படவில்லை எனில், சர்வதேச குற்றவியல் நீதி வழிமுறைகளுக்கு அரசாங்கம் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.

உடனடி கோரிக்கைகள்வெளியிடப்படாத அனைத்து விசாரணை ஆணைக்குழு அறிக்கைகளையும் உடனடியாக வெளியிட வேண்டும். அனைத்துத் தரவுகளையும் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வர வேண்டும்.

அரசு மற்றும் அதன் ஆதரவுப் படைகள் உட்பட அனைத்துப் பிரிவினர் மீதும் பாகுபாடற்ற பொறுப்புக்கூறல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச நீதிச் பொறிமுறைகளுடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.  வரலாற்றை நேர்மையாக எதிர்கொண்டு, அறிக்கைகளை வெளியிட்டு, அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் நீதியை நிலைநாட்ட அரசாங்கம் முன்வர வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் விரைவான தீர்மானம்...

2026-10-12 13:46:56
news-image

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க...

2026-10-12 13:49:45
news-image

பாடசாலைப் பொருட்கள், அத்தியாவசிய உணவுகளுக்கு வற்...

2026-10-12 17:26:58
news-image

ஞானசார தேரரின் காவியுடை விவகாரம்: அரசாங்கத்தை...

2026-10-12 17:38:36
news-image

மஹிந்த ராஜபக்‌ஷ திடீர் உடல்நலக் குறைவால்...

2026-10-12 17:23:28
news-image

இராமநாதன் அர்ச்சுனாவின் எம்.பி. பதவிக்கு எதிரான...

2026-10-12 22:12:08
news-image

கொரிய தன்னார்வ அமைப்பின் விசேட பிரதிநிதிகள்...

2026-10-12 22:07:54
news-image

எமது அரசாங்கத்தில் பாதாள உலகக் குழுக்களுக்கு...

2026-10-12 14:10:40
news-image

அரசாங்கம் அரசியல் பழிவாங்கலுக்கும் விமர்சனங்களுக்கும் முன்னுரிமையளித்துள்ளது...

2026-10-12 12:59:44
news-image

சிறைச்சாலை நிலையியற் கட்டளைகளை மீளாய்வு செய்யுமாறு...

2026-10-12 17:39:35
news-image

மட்டக்களப்பில் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த...

2026-10-12 19:42:21
news-image

கலாலயா கலாசார மற்றும் இளைஞர் அபிவிருத்தி...

2026-10-12 18:40:21