(க.சிவலிங்கமூர்த்தி)
இலங்கையின் அரச பல்கலைக்கழகங்கள் வெறும் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துபவர்களாக மட்டுமன்றி, உள்ளூர் பிரச்சினைகளுக்கு உள்ளூர் தொழில்நுட்ப தீர்வுகளை உற்பத்தி செய்து தேசிய டிஜிட்டல் பொருளாதாரத்தை தீவிரமாக வலுப்படுத்தும் பங்காளர்களாக மாற வேண்டும் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன வலியுறுத்தினார்.
பல்கலைக்கழக அமைப்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை மூலோபாய ரீதியாகவும் பொறுப்புடனும் நிறுவுவது குறித்த சிறப்பு கலந்துரையாடல், 'உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மாற்றம்' என்ற கருப்பொருளின் கீழ் கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீட வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகவும் அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட உயர்கல்வித் துறையின் முக்கிய பங்குதாரர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய செயற்கை நுண்ணறிவுக் கொள்கை சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், தேசிய டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு இணையான வகையில் உயர்கல்வி அமைப்பை மறுசீரமைப்பதற்கும் துணைவேந்தர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட நிர்வாகக் குழுவினரைத் தீவிரமாகப் பங்கெடுக்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
2026 ஜூன் 24 அன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற தேசிய செயற்கை நுண்ணறிவுக் கொள்கை சட்டகம் மற்றும் 2026 முதல் 2029 வரை மூன்றாண்டு தேசிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, 2026 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் ஒவ்வொரு அரச பல்கலைக்கழகமும் தனது நிறுவன ரீதியான செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகள் மற்றும் நிலையான நடைமுறை விதிமுறைகளை தயாரித்துக் கொள்ள வேண்டும்.
இலங்கையின் அரச பல்கலைக்கழகங்கள் வெறும் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துபவர்களாக மட்டுமன்றி, உள்ளூர் பிரச்சினைகளுக்கு உள்ளூர் தொழில்நுட்ப தீர்வுகளை உற்பத்தி செய்து தேசிய டிஜிட்டல் பொருளாதாரத்தை தீவிரமாக வலுப்படுத்தும் பங்காளர்களாக மாற வேண்டும்.
அத்துடன், தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு அமைவாகச் செயற்படுதல், இணையவழி பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு முதிர்ச்சிச் சுட்டெண் மூலம் முன்னேற்றத்தை அளவிடுதல் மற்றும் குறைந்த வசதிகளைக் கொண்ட பல்கலைக்கழகங்களுக்கு பொதுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் மேலாண்மை அமைப்புகளை வழங்குவதன் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM