எவரெஸ்ட் சிகரத்தின் முகாம்களில் தங்கும் மலையேறிகளின் சிறுநீர் மற்றும் பிற மனிதச் செயல்பாடுகளால் உருவாகும் வெப்பம், அங்குள்ள பனிப்பாறைகள் உருகுவதற்கு பங்களிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘வட்டார சுற்றுச்சூழல் மாற்றம்’ என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, உலகளாவிய காலநிலை மாற்றமே எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருகுவதற்கான முதன்மைக் காரணமாகும். எனினும், உள்ளூர் மட்டத்தில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதற்கு மனிதச் செயல்பாடுகளும் பங்களிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தின் உயரமான பகுதிகளில் உடல் வறட்சியைத் தவிர்ப்பதற்காக மலையேறிகளும் அவர்களது வழிகாட்டிகளும் அதிகளவில் தண்ணீர் அருந்துகின்றனர். இதன் காரணமாக, மலையேற்றப் பருவத்தில் அங்கு தங்கியிருப்பவர்களால் தினமும் சராசரியாக 6,000 லீற்றருக்கும் அதிகமான சிறுநீர் வெளியேற்றப்படுவதாக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
மனிதக் கழிவுகள் பேரல்களில் சேகரிக்கப்பட்டு மலையடிவாரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், பெருமளவான சிறுநீர் நேரடியாக கும்பு பனிப்பாறையின் மீது கழிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் இருந்து சுமார் 37°C வெப்பநிலையில் வெளியேறும் சிறுநீர், பனிப்பரப்பில் நேரடியாக வெப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் பனி உருகுவதற்கு பங்களிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, ஒவ்வொரு மலையேற்றப் பருவத்திலும் சுமார் 154 தொன் பனி உருகுவதாக ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.
அடிப்படை முகாமில் மனிதச் செயல்பாடுகளால் ஏற்படும் பனி உருகுதலில் சிறுநீர் வெளியேற்றம் சுமார் 6 சதவீதம் பங்களிப்பதாகவும், எஞ்சிய 94 சதவீதம் எரிபொருள் பயன்பாட்டால் ஏற்படுவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
மலையேறிகளின் சமையல், மின்சாரம் மற்றும் வெப்பத் தேவைகளுக்காக மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றிலிருந்து வெளியாகும் ஒட்டுமொத்த வெப்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வெப்பச் சூழல், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,500 தொன் பனி மற்றும் பனிப்பாறைகள் உருகுவதற்குப் போதுமானதாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருகுவதில் உலகளாவிய காலநிலை மாற்றமே பிரதான காரணியாக இருப்பதாகவும், உள்ளூர் மனிதச் செயல்பாடுகள் அதனை மேலும் தீவிரப்படுத்தும் காரணிகளில் ஒன்றாக இருப்பதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM