(நெவில் அன்தனி)
டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இலங்கையின் ஈட்டி எறிதல் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே வெற்றிபெற்று சம்பியனாகி வரலாறு படைத்தார்.
பெல்ஜியத்தின் ப்ரசல்ஸ் நகரில் உள்ளமன்னர் பவ்டூயின் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (5) இரவு நடைபெற்ற வண்டா டயமண்ட் லீக் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் ருமேஷ் தரங்க 89.04 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.
இதன் மூலம் டயமண்ட் லீக் இறுதிப் போட்டி வரலாற்றில் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்த முதலாவது இலங்கையர் என்ற பெருமைக்குரிய வரலாற்றுச் சாதனையை ருமேஷ் தரங்க நிலைநாட்டினார்.
இப் போட்டியில் தனது மூன்றாவது முயற்சியிலேயே ருமேஷ் தரங்க இந்தத் தூரத்தைப் பதிவுசெய்து சம்பியன் படத்தை உறுதிசெய்தார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்த வருடம் உலகின் முதல் நிலை வீரராக டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய அவர், மீண்டும் சர்வதேச வீரர்களுக்கு எதிராக தனது திறமையை வெளிப்படுத்தி சம்பியனானார்.
இந்த வெற்றியானது ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு 2026 பருவகாலத்தில் மற்றுமொரு முக்கிய சம்பியன் பட்டத்தைச் சேர்க்கிறது.
ரொமில் ஜூன் 4ஆம் திகதி நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில் ருமேஷ் தரங்க 92.62 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து இந்த வருடத்துக்கான உலகின் முன்னணி சாதனையையும் தன் வசப்படுத்திக்கொண்டிருந்தார்.
ப்ரசல்ஸ் டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் போலந்து வீரர் தாவித் வெக்னரை 1.57 மீற்றர் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு ருமேஷ் தரங்க முதலாம் இடத்தைப் பெற்றார்.
தாவித் வெக்னர் 87.47 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தையும் ட்ரினிடாட் மற்றும் டுபாகோ வீரர் கெஷோன் வொல்கொட் 83.99 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM