ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா!

06 Sep, 2026 | 02:41 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய தேசிய கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (06) ஞாயிற்றுக்கிழமை காலை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிழ்வு காலை 9.15 மணியளவில் ஆரம்பித்தது. 

ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சியை பிரதி நிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். என்றாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தவிர்க்க முடியாத காரணத்தினால் பங்குகொள்ளவில்லை என அங்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேநேரம் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையிலான சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநித்துவப்படுத்தி அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், ஜனநாயக குடியரசு முன்னியின் தலைவர் சம்பிக்க ரணவக்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் ஆரம்பமாக சர்வ மத தலைவர்களின் ஆசீர்வாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாட்டின் உன்னத நிலைக்கு செயற்பட்டு மரணித்த அரசியல் கட்சி தலைவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இதன்போது நாட்டின் முதலாவது பிரதமரான டி,எஸ். சேனாநாயக்கவின் உருவப்படத்துக்கு ரணில் விக்ரமசிங்க மலர் மாலை அணிவித்தார். அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், ஜீவன் தொண்டமான முறையே அங்கு வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ஆர், சம்பந்தன் மற்றும் செளமிய மூர்த்தி தொண்டமான் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்துறை கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகர ரத்நாயக்கவினால் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதத்தலைவர்களுக்கு அன்பளிப்புகள் கையளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நன்றி உரையுடன் ஐக்கிய தேசிய கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா 10 ,15 மணியளவில் நிறைவுக்கு வந்தது. அங்கு யாரும் உரை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா மிகவும் எளிமையாக மேற்கொள்ளப்பட்டாலும் எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்தில் அதனை விமரிசையாக கொண்டாட இருப்பதாக அங்கு அறிவிப்பு செய்யப்பட்டது. அத்துடன் இன்று சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டிசில்வாவின் பிறந்த தினம் என்பதால், அவரை கெளரவிக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் அங்கு கலந்துகொண்டிருந்த கட்சி உறுப்பினர்கள் அனைவரின் பங்குபற்றலுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டுபாயில் வேலை பெற்றுத் தருவதாக பண...

2026-10-15 01:51:57
news-image

சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிதிப்...

2026-10-15 01:46:49
news-image

அனைத்து மாகாணங்களுக்கும் கடும் மின்னல் தாக்கம்...

2026-10-15 01:35:39
news-image

இலங்கை மீண்டும் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்படுவதை...

2026-10-15 01:26:05
news-image

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல்...

2026-10-14 17:14:31
news-image

தேர்தல்கள் தொடர்பான சட்டங்கள் மீளாய்வு :...

2026-10-14 12:43:43
news-image

மூன்று தசாப்தகாலப் போரின் விளைவுகளால் இன்னமும்...

2026-10-14 14:15:26
news-image

பௌத்த மதத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படுவதாக...

2026-10-14 16:37:07
news-image

சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் தேரர்கள்...

2026-10-14 17:39:44
news-image

அரசாங்கம் மதக் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டி நாட்டை...

2026-10-14 15:54:43
news-image

ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு எதிராக அரசியல் பழிவாங்கல்...

2026-10-14 14:13:27
news-image

பின்லாந்தில் அமைச்சர் பிமல்: செம்மணிப் புதைகுழி...

2026-10-14 21:24:26