வடபகுதி மரக்கறி வகைகளின் வரவால் மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் தற்போது மரக்கறி வகைகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மரக்கறி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக தம்புள்ள விஷேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு வடபகுதியிலிருந்து பெருமளவு மரக்கறி வகைகள் சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன. தினசரி பெருந்தொகையான மரக்கறி வகைகள் வடபகுதியிலிருந்து லொறிகளில் ஏற்றி வரப்படுவதாக பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை மரக்கறி வகைகளின் விலைகள் குறைந்துள்ளதை அடுத்து மத்திய மாகாணத்திலிருந்து மட்டுமன்றி பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மரக்கறி வியாபாரிகள் தம்புள்ளைக்கு வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரங்களில் ஒரு கிலோ ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமான விலைகளில் விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் தற்போது ஒரு கிலோ 250 ரூபா வரை விலை வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.