காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே சோர்வு ஏற்படுகிறதா...?

Published By: Digital Desk 2

05 Sep, 2026 | 04:54 PM
image

பணிச்சுமையின் காரணமாக இன்றைய சூழலில் எம்மில் பலரும் காலை- மாலை என இரண்டு வேளையிலும் கடுமையாக உழைக்கிறார்கள். இதனால் அவர்களின் ஓய்வு எடுக்கும் தருணங்களும், தன்மையும் மாறிவிட்டது.

எம்முடைய உடலில் பாரம்பரியமாக இயங்கி வரும் உயிரியல் கடிகார சுழற்சிக்கு எதிராக நாம் இன்று செயல்பட்டு வருவதால் சோர்வு உள்ளிட்ட விவரிக்க இயலாத பல பாதிப்புகள் ஏற்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

எம்மில் சிலர் வார விடுமுறைக்குப் பிறகு குறிப்பாக திங்கட்கிழமையில் காலையில் படுக்கையை விட்டு எழும்போது சோர்வாக இருக்கிறதே என உணர்வார்கள். அந்த சோர்வை விரட்ட ஒரு கோப்பை கோப்பியை பருகுவார்கள்.

ஆனால் அவர்களுடைய மனதில் 'இன்னும் ஒரு மணி தியாலம் வரை உறங்கி இருக்கலாம் அப்போதுதான் எம்முடைய சோர்வு நீங்கும்' என அவதானிப்பர். ஆனால் இது தவறு என்று வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

பொதுவாக ஒவ்வொரு மனிதருக்கும் ஏழு அல்லது எட்டு மணி நேரம் வரை உறங்க வேண்டும் என்றாலும்.. இதில் ஆழ்ந்த உறக்கம் என்பது அவசியம் இடம்பெற வேண்டும். இன்றைய சூழலில் எம்மில் பலரும் ஆழ்ந்த உறக்க நிலைக்கு செல்வதில்லை.

சிலர் சென்றாலும், தேவையான அளவு ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்வதில்லை. இதனால் உயிரியல் கடிகார சுழற்சியில் தடைகளும், குளறுபடிகளும் ஏற்படுகிறது.

இதனை மருத்துவ மொழியில் போதிய அர்த்தமுள்ள தூக்கமின்மை என விவரிக்கிறார்கள். உறக்கத்தின் போது ஆழ்ந்து உறங்குவது தான் ஆரோக்கியத்தின் அடித்தளம்.

இதனைத் தொடர்ந்து ஏழு முதல் எட்டு மணி தியாலம் வரை உறங்கினாலும், அவர்கள் குறட்டையை எழுப்பினால், அவர்களும் ஆரோக்கியமற்ற உறக்கத்தை மேற்கொண்டு , அதிகாலையில் விழும் போது சோர்வை உணர்வர்.

பொதுவாக சோர்வு என்பது எம்முடைய மூளை தனக்குத் தேவையான ஓக்சிஜன்  பூரணமான அளவில் கிடைக்கவில்லை என்பதை உடலுக்கு உணர்த்தும் ஒரு அறிகுறியாகும். இதனை நாம் உணர்ந்து சோர்வில்லாமல் உற்சாகமாக இயங்குவதற்குரிய வழிமுறையை கையாள வேண்டும்.

சோர்வு நீங்க வேண்டும் என்றால் உங்களுடைய மூளை முழுமையான ஆரோக்கியத்துடன் இயங்க வேண்டும்.  உங்களுடைய உடல் உறக்கத்தின் போது ஓய்வில் இருந்தாலும் மூளை தொடர்ந்து இயங்குவதற்குரிய ஆற்றல் இல்லையென்றால் சோர்வு எழும்.  இதற்காக உறங்கும் முறையை சீராக்கிக் கொள்வதுடன் ஆரோக்கியமான சத்துள்ள சரிசம விகித உணவையும் பசியாற வேண்டும்.

வைத்தியர் விக்னேஷ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் கேரியஸ் லீஸன்ஸ் எனும் பற்களில்...

2026-10-09 14:31:07
news-image

டெஸ்டிகுலர் டோர்ஷன் எனும் விதைப் பையில்...

2026-10-08 17:25:50
news-image

பீடியாட்ரிக் ஓர்தோபீடிக் கிளப்ஃபுட் எனும் பிறவி...

2026-10-07 16:28:17
news-image

செல்லுலிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய நவீன...

2026-10-06 15:58:41
news-image

பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி கண் பாதிப்பு...

2026-10-05 12:16:44
news-image

குடல் அட்டாக் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2026-10-03 16:01:44
news-image

நுண் இரத்த நாள அடைப்பை கண்டறியும்...

2026-10-02 15:16:19
news-image

ரைனோஸ்கிளிரோமா எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-10-01 16:18:03
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-09-30 16:23:33
news-image

ஹைட்ரோநெஃப்ரோஸிஸ் எனும் சிறுநீரக பாதிப்பிற்குரிய நவீன...

2026-09-29 14:05:06
news-image

ஷிங்கிள்ஸ் தடுப்பூசியை யார் செலுத்தி கொள்ளலாம்?

2026-09-28 16:01:06
news-image

ஹீட்டோரோடோபிக் ஹார்ட் ட்ரான்ஸ்பிளான்டேசன் எனும் அரிய...

2026-09-25 16:14:17