இன்றைய சூழலில் பிரியாணி எனும் மணம் வீசும் உணவின் மீது அனைத்து தரப்பு மக்களும் பேரார்வம் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் அசைவ பிரியாணியாக இருந்தால் வயிறார பசியாறுகிறார்கள். அதிலும் குறிப்பாக வார இறுதி விடுமுறையில் நடைபெறும் விருந்துகளில் தவறாமல் பங்கு பற்றி, அங்கு உணவிற்காக வைக்கப்பட்டிருக்கும் ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி பிரியாணி பிரசித்தம்.
இதனை அகால வேளையில் அளவுக்கு அதிகமாக விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையின் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சிலர் அசைவ உணவை குறிப்பாக ஆட்டிறைச்சிக் கொண்டு சமைக்கப்படும் அசைவ உணவுகளை உறுதியாக தவிர்த்திட வேண்டும் என கூறுகிறார்கள்.
அது யார்? என்பதையும், அந்தப் பட்டியலில் நீங்களும் இடம் பிடித்திருக்கிறீர்களா? என்பதையும் தொடர்ந்து பார்ப்போம்.
கேது பகவானின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் இரண்டு, மூன்று, நான்கு ஆகிய பாதங்களிலும்.. சுக்கிரன் பகவானின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தின் முதல் பாதத்திலும் பிறந்தவர்கள் அசைவ உணவுகளை கட்டாயம் ஆயுள் முழுவதும் தவிர்த்து விட வேண்டும்.
இதனை கடந்து நீங்கள் அசைவ உணவுகளை குறிப்பாக ஆட்டிறைச்சியை பசியாறினால் அது தொடர்பான நோய் பாதிப்பு நிச்சயம் உண்டாகும்.
அதிலும் குறிப்பாக ஃபேட்டி லிவர், ரத்த கொதிப்பு, உயர் குருதி அழுத்த பாதிப்பு, போன்ற பாதிப்புகளை உண்டாக்கி, உயிருக்கு பாரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும்.
இது தொடர்பான உங்களுடைய உடல் நல பரிசோதனையும் உங்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் யோகமாக செயல்படும் காலகட்டத்தை சோதிட நிபுணர்களின் ஆலோசனையுடன் தெரிவு செய்து, அந்த தருணத்தில் மேற்கொள்வது தான் நல்ல பலனை வழங்கக் கூடும்.
அதிலும் குறிப்பாக பவ கரணமும் சுகர்மம், சித்தி, பிராமியம் ஆகிய நாம யோகங்கள் இயங்கும் காலகட்டத்தையும் துல்லியமாக அவதானித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதனைத் தொடர்ந்து யோகமான நாளில் வைத்தியரை சந்தித்து சிகிச்சை பெற்றால் அவை முழுமையான நிவாரணத்தை வழங்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM