சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் நேச்சர் இன்ஃபோகஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'வைல்ட் தமிழ்நாடு' எனும் ஆவண திரைப்படம் எதிர்வரும் ஏழாம் திகதி முதல் பட மாளிகையில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆவணப்பட இயக்குநர் கல்யாண் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள 'வைல்ட் தமிழ்நாடு' எனும் ஆவண திரைப்படம்- தமிழ்நாட்டின் வேறுபட்ட புவியியல் பகுதிகளில் வாழும் வனவிலங்கு உயிரினங்களை நான்கு ஆண்டுகள் காத்திருந்து படமாக்கப்பட்டு, அவை ஒரு மணி நேர அளவிலான ஆவண படைப்பாக தொகுக்கப்பட்டிருக்கிறது.
இந்த படைப்பை இலங்கை மற்றும் இந்தியா முழுவதும் சங்கிலி தொடராக பட மாளிகைகளை கொண்டிருக்கும் பி வி ஆர் குழுமம் வெளியிடுகிறது.
தமிழகத்தில் வாழும் உலகின் அரிய வனவிலங்குகளை பற்றிய காணொளி தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவண திரைப்படம் படமாளிகையில் வெளியாவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக உயிரியல் தொடர்பான பாடங்களில் உயர்கல்வி கற்கும் மாணவர்கள், வனவிலங்கு பிரியர்கள், விலங்கு நல ஆர்வலர்கள் ஆகியோரிடம் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM