தயாரிப்பு : அந்தோணி அட்லியேர்ஸ் நிறுவனம்
நடிகர்கள் : டி. அந்தோணி, மதுமிதா தாஸ், ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி, ஜீவா ரவி, ஆலம் ஷா மற்றும் பலர்.
இயக்கம் : டி. அந்தோணி
மதிப்பீடு : 2/5
புதுமுக கலைஞரான டி. அந்தோணி கதையின் நாயகனாக நடித்திருப்பதுடன் கதையை எழுதி, இயக்கி, தொகுத்து, தயாரித்திருக்கிறார். அமெரிக்காவில் வாழும் இந்தியரான இவரது தமிழ் சினிமா மீதான ஆர்வம் அர்த்தமுள்ளதா? ஆர்வக்கோளாறா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தாயை இழந்த பிறகு குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தையை வெறுத்து நகரத்திற்கு புலம்பெயர்ந்து தன் வாழ்வை கட்டமைத்துக் கொண்டு நண்பர்களுடன் உற்சாகமாக மது, மாது என விரும்பிய வாழ்க்கையை வரம் பெற்ற மகிழ்ச்சியுடன் வாழ்கிறான் கதையின் நாயகனான அந்தோணி. இவர் தன்னுடைய வழக்கமான வார விருந்திற்கு வங்காள மொழி பேசும் மதுமிதா எனும் பாலியல் தொழிலாளியுடன் உல்லாசமாக இருக்கிறான்.
அந்தத் தருணத்தில் 'உதட்டுடன் உதடு பொருத்தி முத்தம் ஒன்று தா' என கேட்க பாலியல் தொழிலில் இருந்தாலும் உதட்டுடன் உதடு பொருத்தி முத்தம் தருவதற்கு உணர்வுகள் முக்கியம்.
உங்களிடத்தில் எனக்கு ஏதேனும் ஈர்ப்பு ஏற்பட்டால் அதன் பிறகு அது தானாக நிகழும் என்கிறார். ஒரு பாலியல் தொழிலாளியின் காதலை பெற முடியாதா..! என நினைக்கும் அந்தோணி அந்த பெண் நடவடிக்கை, தோற்றம், அழகு, பேச்சு ஆகியவை மிகவும் பிடித்து விட காதலிக்க தொடங்குகிறான்.
அந்தோணியை தானும் விரும்புவதால் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை அவனிடம் பகிர்ந்து கொள்கிறாள் மதுமிதா. அதன் பிறகு இவர்களுடைய காதல் என்ன ஆனது? தொடர்ந்ததா? இல்லை இடைநிறுத்தம் ஏற்பட்டதா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
முதலில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் அந்தோணி திரையில் தோன்றிய உடன் பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும் காட்சிகள் செல்லச் செல்ல அதில் அவர் உணர்வுகளை துல்லியமாக இயல்பாக வெளிப்படுத்த ரசிகர்களின் மனதில் மெல்ல மெல்ல இடம்பிடிக்கிறார்.
பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் மதுமிதா தாஸ் அந்த கதாபாத்திரத்தின் கவர்ச்சி எல்லையை உணர்ந்து அதனை தன் இளமை ததும்பும் முகத்தின் மூலமே வெளிப்படுத்தி ரசிகர்களை எளிதாக வசப்படுத்துகிறார்.
இந்த இருவரை கடந்து நண்பராக நடித்திருக்கும் ரெஜின் ரோஸ் ரசிகர்களை கவர்கிறார்.
ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை, உரையாடலுக்கான நேரடி ஒலிப்பதிவு அளவான ஒலியில் ஒலிக்கும் கதாபாத்திரத்தின் குரல்கள் ரசிகர்களுக்கு திகட்டாத படைப்பு அனுபவத்தை வழங்குகிறது.
ஏன் என்னை ஏதோ செய்தாய்? என தமிழில் கவிதை போல் தலைப்பு இருந்தாலும் படத்தில் ஆங்கில மொழியிலான உரையாடல் அதிகம். இதற்கு தமிழில் அடி குறிப்பினை இடம்பெறச் செய்திருக்கலாம். பாமர ரசிகனுக்கு இது தமிழ் படமா? ஆங்கில படமா? என்ற குழப்பம் ஏற்படுகிறது.
முதல் பாதியில் இருந்த சுவாரசியம் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். உச்சகட்ட காட்சியில் இயக்குநர் வைத்திருக்கும் டிவிஸ்ட் ...எதிர்பார்த்ததுதான் என்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
கெட்ட வார்த்தையை கற்றுக் கொடுக்கும் காட்சி... அப்பட்டமான வெகுஜன ரசனை.
ஏன் என்னை ஏதோ செய்தாய்- கடந்து செல்லும் கடற்கரை காற்று.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM