தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விமல் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சண்டக்காரி' திரைப்படம் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி மற்றும் ஊழியருக்கு இடையேயான காதல், கொமடி ஆகியவற்றை விவரிக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ஆர். மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சண்டக்காரி' திரைப்படத்தில் விமல் ,ஸ்ரேயா, சத்யன், பிரபு, கே ஆர் விஜயா, 'புன்னகை பூ' கீதா, ரேகா, தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாஸ் புரொடக்ஷன் கொர்ப்பரேசன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''லண்டனில் இயங்கி வரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் உயரதிகாரியாக ஸ்ரேயா பணியாற்ற அவருக்கு கீழ் ஊழியராக விமல் பணியாற்றுகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் காதல், மோதல், ஈகோ ஆகியவற்றை நகைச்சுவையுடன் விவரிப்பது தான் இப்படத்தின் திரைக்கதை'' என்றார் .
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் மலையாள மொழியில் 2012 ஆம் ஆண்டில் வெளியான 'மை பாஸ்' படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த சண்டக்காரி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களாக வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படம் விரைவில் படமாளிகையில் வெளியாகிறது. வெளியீட்டு திகதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM