பாடகி தீ - அமெரிக்க பொப் இசை கலைஞர் லாரா ராஜ் இணைந்து பாடிய ‘வாரி வாரி - VARI VARI’ பாடலின் ரீமிக்ஸ் வெளியீடு

Published By: Digital Desk 2

05 Sep, 2026 | 04:27 PM
image

சுயாதீன இசையின் மூலம் சர்வதேச அளவில் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஈழத்தமிழ் பாடகி தீ.. அமெரிக்க பொப் இசை கலைஞரான லாரா ராஜ் உடன் இணைந்து ‘வாரி வாரி' (VARI VARI) எனும் பாடலின் ரீமிக்ஸ் வடிவத்தை வெளியிட்டுள்ளனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தயாரித்து, பாடலாசிரியர் விவேக் வரிகளில், பாடகி தீ குரலில் ஒலித்த ‘வாரி வாரி’ எனும் தமிழ் சுயாதீன விடியோ இசை அல்ப பாடல் அண்மையில் வெளியாகி, இரண்டு கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பார்வைகளை பெற்று மிகப்பெரிய சாதனையை படைத்தது.

இந்த தருணத்தில் அமெரிக்க பொப் இசை பாடகியான லாரா ராஜ் உடன் இணைந்து பாடகி தீ ‘வாரி வாரி ’ எனும் பாடலின் ரீமிக்ஸை பாடி வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார், 808 கிருஷ்ணா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

சர்வதேச இசைக் கலைஞர்களான தீ மற்றும் லாரா ராஜ் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த ரீமிக்ஸ் பாடல், கலாச்சார பரிமாற்றத்தின் அடையாளமாக திகழ்ந்து, இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right