தயாரிப்பு : ஏ கே ஃபிலிம் ஃபேக்டரி
நடிகர்கள் : ஜீ. வி. பிரகாஷ் குமார், கயாடு லோஹர், டி. எம். கார்த்திக், குமார் நடராஜன், 'ஆதித்யா' கதிர், 'லொள்ளு சபா' மாறன் மற்றும் பலர்.
இயக்கம் : மாரியப்பன் சின்னா
மதிப்பீடு : 2.5 / 5
ரத்த காட்டேரி கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் ஹொலிவுட்டில் வெளியாகி ரசிகர்களை பயமுறுத்தி இருக்கிறது. அந்த வகையில் தமிழில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படம் ரசிகர்களை அச்சமூட்டியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
சென்னையில் உள்ள அச்சுக்கூடம் ஒன்றில் ஊழியராக பணியாற்றுகிறார் மகி( ஜீ வி. பிரகாஷ் குமார்). இவர் தங்கி இருக்கும் அறையை காலி செய்யச் சொல்லி அந்த வீட்டின் உரிமையாளர் தொடர் நெருக்கடி கொடுக்க, புதிதாக குறைந்த வாடகையில் அறையைத் தேடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஒரு பெண்ணின் குரல் குரலில்... 'அறை வாடகைக்கு இருக்கிறது. வருகிறீர்களா!?' என கேட்டவுடன், குரலில் இருக்கும் கிறக்கம் மற்றும் வெர்ஜின் பாய் என்பதால் ஆசையுடன் அந்த பெண்ணின் அறைக்கு செல்கிறார் மகி.
அந்த பெண் தன் பெயர் சிந்து( கயாடு லோஹர்);என சொல்லி அறிமுகமாகிறார். சிந்துவின் இளமையும், தனிமையும் அளித்த குதூகலத்தால் அவள் மீது காதல் உண்டாகிறது. பல தருணங்களில் அத்துமீறவும் முயற்சிக்கிறார். அத்துடன் காதலியிடம் ஆசையுடன் சொகுசு துவி சக்கர வாகனத்தை கேட்க அதை சிந்து, மகிக்கு பரிசாக தர வியப்பின் உச்சத்திற்கு செல்கிறான்.
மகியின் ஒவ்வொரு விருப்பத்தையும் அறிந்து அதனை பூர்த்தி செய்கிறாள் சிந்து. இதனால் சிந்து மீதான காதல் உயர்ந்து அவளை நெருங்குகிறான். அப்போதுதான் அவள் மனிதர்களை போல இல்லாமல் மனிதர்களின் குருதியை குடித்து உயிர் வாழும் ராட்சச மிருகம் என்பது தெரிய வருகிறது. அந்த அமானுஷ்ய சக்தி படைத்த பெண்ணிடமிருந்து மகி தப்பிக்க திட்டமிடுகிறார். இது நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.
வாம்ப்பயர் எனப்படும் ரத்த காட்டேரி எப்படி உருவானது என்பது குறித்த இயக்குநரின் விளக்க விவரண உரை சிறப்பு.
அமானுஷ்ய சக்தி படைத்த பெண் கதாபாத்திர த்தில் நடித்திருக்கும் கயாடு லோஜர் - ஒற்றை ஆளாக இப்படத்தின் கதையை தோளில் சுமந்து அதை கட்டுக்குழையாத இளமையாலும் சுட்டுத் தொலைக்கும் கவர்ச்சியாலும்... நிரப்பி, ரசிகர்களை வியக்க வைக்கிறார்.
மகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜீ. வி. பிரகாஷ் குமார் வழக்கம் போல் கதாபாத்திரத்தின் தன்மையை உணராமல்.. இயக்குநர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார். பாஸ்! நடிப்பை விட மியூசிக் உங்களுக்கு நன்றாக வரும். அதில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்.
கயாடு லோஹரைத் தொடர்ந்து இப்படத்தை பார்ப்பதற்கு மற்றும் ஒரு காரணமாக திகழ்கிறார் படத்தின் இசையமைப்பாளரான சாம் சி எஸ். பாடல்களும், பின்னணி இசையும் தனித்துவமான கவனம் பெறுகிறது.
முதல் பாதியில் இருந்த சுவாரசியம், இரண்டாம் பாதியில் வழக்கமான தளத்தில் பயணிப்பதால் காணாமல் போகிறது.
உச்சகட்ட காட்சியில் வாம்ப்பயர் எனும் ரத்த காட்டேரியின் வீரியமான கோர உருவத்தை காட்டாமல்... சொதப்பி இருக்கிறார்கள்.
சாதாரணமான இளைஞனின் வாழ்க்கையில்...அமானுஷ்ய ஆற்றல் மிக்க இளம் பெண் குறுக்கிட்டால்.. எப்படி இருக்கும்? என்ற கற்பனை சுகமானது என்றாலும்.. அதனை பலவீனமான திரை கதையால் விவரித்திருப்பது தான் ரசிகர்களை சோதிக்கிறது.
இம்மார்ட்டல் - லவ் மார்ட்டல்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM