தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்திற்குப் பதிலாக, ஆப்பிரிக்க கண்டத்தின் உண்மையான நிலப்பரப்பளவை மிகவும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் புதிய உலக வரைபடத்தைப் பயன்படுத்துவதற்கான "வரைபடத்தைச் சரிசெய்வோம்" வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது.
டோகோ நாட்டினால் முன்மொழியப்பட்டு, ஆப்பிரிக்க ஒன்றிய உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட இத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட 164 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்ததுடன், 6 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன.
1569 ஆம் ஆண்டு ஜெரார்டஸ் மெர்கேட்டர் என்பவரால் உருவாக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மெர்கேட்டர் வரைபடம், ஆப்பிரிக்காவையும் கிரீன்லாந்தையும் ஒரே அளவில் காட்டுகிறது. ஆனால், உண்மையில் ஆப்பிரிக்காவானது கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரிய நிலப்பரப்பைக் கொண்டதாகும்.
2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'ஈக்வல் எர்த் ப்ரொஜெக்ஷன்' வரைபடத்தை ஆப்பிரிக்க ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், மெக்சிகோ மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதியை ஆப்பிரிக்காவிற்குள் அடக்கினாலும் இன்னும் நிலப்பரப்பு மீதமிருக்கும் அளவுக்கு அது பரந்தது என்பதை இப் புதிய வரைபடம் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.
பழைய வரைபடம் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளின் வளம், மக்கள் தொகை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைக் குறைத்து மதிப்பிட வழிவகுத்ததாக புவியியலாளர்களும் வெளியுறவுத் துறை அதிகாரிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இத் தீர்மானம் ஐ.நா பொதுச்சபையில் கட்டாயமாக்கப்படாவிட்டாலும், உலகளாவிய ரீதியில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பயன்படுத்தும் வரைபடங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM