மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands and Heritage East – 2026’ வர்த்தகச் சந்தை மற்றும் கண்காட்சி!

05 Sep, 2026 | 03:18 PM
image

கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம்  இணைந்து ஏற்பாடு செய்த “Hands and Heritage East – 2026” எனும் கிழக்கு மாகாண வர்த்தகச் சந்தை மற்றும் கண்காட்சி  கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நான்கு நாட்கள் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வர்த்தகச் சந்தை மற்றும் கண்காட்சியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

கிழக்கு மாகாணத்தின் கிராமிய கைவினைப் பொருட்கள், பாரம்பரியக் கலைகள், கலாசாரப் பாரம்பரியங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் தொழில் முயற்சிகளை மக்களிடம் அறிமுகப்படுத்தி அவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் உள்ளூர் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன், கிராமிய தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய களமாக அமையவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16
news-image

கொழும்பில் இடம்பெற்ற கேஷ் திரைப்பட நிறுவனத்தின்...

2026-10-07 13:02:02
news-image

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 70ஆவது...

2026-10-05 18:00:23
news-image

வளர்ந்து வரும் பாடகர்களுக்கு புதிய வாய்ப்பு

2026-10-05 10:26:46
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் முத்தமிழ்...

2026-10-05 10:10:43
news-image

திருகோணமலையில் தமிழ் சிங்கள அகராதி நூல்...

2026-10-04 10:10:01
news-image

இராணுவத்தின் 77ஆவது ஆண்டு நிறைவு: வெள்ளவத்தை...

2026-10-02 18:53:22