வென்னப்புவையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி: இரு சந்தேகநபர்கள் கைது!

05 Sep, 2026 | 02:55 PM
image

வென்னப்புவ - நைனாமடம் பகுதியில் சட்டவிரோத மதுபானத் தொகையுடன் இரு சந்தேகநபர்களைப் பொலிஸார் வெள்ளிக்கிழமை (04) கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படை, கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வென்னப்புவ பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் 300 லீற்றர் 'கோடா' அடங்கிய 3 பீப்பாய்கள், 5 வெற்றுப் பீப்பாய்கள், 80 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கொண்ட 02 கேன்கள் மற்றும் 02 செப்புச் சுருள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரும் வாய்க்கால் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், சட்டவிரோத மதுபானத் தொகை மற்றும் உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, பொலிஸாரால் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கையகப்படுத்திய சகல தனியார் காணிகளையும் விரைவில்...

2026-10-08 17:06:21
news-image

பழிவாங்கவேண்டிய தேவை எமக்கு இல்லை ;...

2026-10-08 17:20:55
news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ கைது அரசியல் தேவைக்காக...

2026-10-08 17:21:37
news-image

ஊழல் விவகாரத்தில் எதிர்க்கட்சியின் இரட்டை நிலைப்பாடு...

2026-10-08 17:03:17
news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ, நாமல் சிறையில்! ;...

2026-10-08 20:28:28
news-image

2500 ஆண்டுகால பௌத்த பாரம்பரியத்தின் மீது...

2026-10-08 17:01:03
news-image

பிரபாகரனாலும் ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை...

2026-10-08 14:34:02
news-image

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட...

2026-10-08 21:48:37
news-image

செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் உள்ளக...

2026-10-08 17:53:12
news-image

ஊழல் எதிர்ப்பு சட்டத் திருத்தம் அரச...

2026-10-08 16:59:39
news-image

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் வாக்கெடுப்பின்றி...

2026-10-08 21:31:22
news-image

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான தடுப்புக்காவல் நிலையமாக...

2026-10-08 20:29:26