தெஹிவளையில் தீவைத்து நபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: பிரதான சந்தேகநபர் கைது!

05 Sep, 2026 | 02:34 PM
image

தெஹிவளை, ஓபன் வீதியில்  கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி பெட்ரோல் ஊற்றித் தீவைத்து நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப் பணியகத்தின் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிலந்த கமகேவிற்கு கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமையவே இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொலையைச் செய்த பின்னர் கண்டி பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தப்பிச் செல்லப் பயன்படுத்திய காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது தந்தையைக் கொலை செய்தமைக்குப் பழிவாங்கும் நோக்கிலேயே இக் கொலையைச் செய்ததாகச் சந்தேகநபர் பொலிஸ் விசாரணைகளின் போது ஒப்புக்கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 'கொஸ்மல்லி' எனும் பாதாள உலகக் குற்றவாளியின் நெருங்கிய சகா எனவும்  கொல்லப்பட்டவர் 'படோவிட அசங்க' எனும் குற்றவாளியின் நெருங்கிய சகா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் இருவர் மீதும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாகப் பொலிஸார் மேலதிகமாகத் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13