முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலையில் கட்டட வசதிப் பற்றாக்குறை: அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு பெற்றோர் கோரிக்கை!

Published By: Digital Desk 2

05 Sep, 2026 | 02:10 PM
image

கிண்ணியா வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண். புகாரி நகர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் போதிய கட்டட வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாகப் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏனைய பாடசாலை மாணவர்களைப் போலவே இப் பாடசாலைச் சிறுவர்களும் சிறந்த கல்வியைப் பெறுவதற்கான உரிமை கொண்டவர்கள் என்பதால், அவர்களுக்கான பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடசாலைக்குக் கிடைக்க வேண்டிய கல்வி வளங்கள் மற்றும் கட்டிட வசதிகளைச் சரியான முறையில் பங்கீடு செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இப் பாடசாலையின் கல்வி வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் மாகாணக் கல்வித் திணைக்களம், மாகாணக் கல்வி அமைச்சு மற்றும் கிண்ணியா கல்வி வலய அதிகாரிகள் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு உரிய தீர்வை விரைவாக வழங்கிடுமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13