நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் - குருணாகல் வீதியின் மெதகம பகுதியில் வைத்து, குருணாகல் திசையை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி, அதன் பின்னால் பயணித்தவர் மற்றும் பாதசாரி ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து ஹெட்டிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாதசாரி உயிரிழந்துள்ளார்.
ஹல்மில்லவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் சாரதியும் பின்னால் பயணித்தவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியின் ஆலம்குளம் பகுதியில் வைத்து, வாழைச்சேனையிலிருந்து பொலன்னறுவை திசையை நோக்கிப் பயணித்த லொறியொன்றுடன் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியும் அதன் பின்னால் பயணித்தவரும் பலத்த காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பின்னால் பயணித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த வீதி விபத்துக்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM