கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதைத் தடுத்து உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ் வெளிநாட்டுப் பயணத் தடையை குடிவரவு மற்றும் குடியகல்வுக்கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அசல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்புமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பிரசாரக் கூட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இம் மரண தண்டனைத் தீர்ப்பிற்கு எதிராகப் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அவர்களைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அத் தீர்மானம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அதனை இரத்து செய்து தண்டனையை உறுதிப்படுத்துமாறு கோரியும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ் மேல்முறையீட்டு மனு நேற்று வெள்ளிக்கிழமை (04) பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார முன்வைத்த கோரிக்கையைக் கருத்திற்கொண்டே நீதிமன்றம் இக் கட்டளையைப் பிறப்பித்துள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM