பெண்கள் வயோதி பத்தால் ஏற்படும் நரையை மறைக்கவும் நவநாகரிகத்துக்காகவும் கேசச் சாயத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

 இந்நிலையில் கேசச் சாயத்தை  அளவுக்கதிகமாக பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பு புற்றுநோய் ஏற்படும் அபாயம்  உயர்வாகவுள்ளதாக  பிரித்தானிய மருத்துவ பேராசிரியர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய லண்டன்,  பிரின்சஸ் கிரேஸ் மருத்துவமனையின் பேராசிரியர் கெபாஹ்  மொக்பெல் மேற்கொண்ட மேற்படி ஆய்வில் கேசச் சாயத்தைப் பயன்படுத்தும் பெண்களுக்கு  அதனை பயன்படுத்தாத ஏனைய பெண்களுடன் ஒப்பிடு கையில் மார்பு புற்றுநோய் ஏற்படும் அபாயம் 14  சதவீதம் அதிகமாகவுள்ளமை கண்டறியப்பட்டுள்          ளது.

அதனால் பெண்கள் வருடத்திற்கு 6  தடவைகளுக்கு மேல் கேச சாயத்தை பயன்படுத்தக் கூடாது எனவும் இயற்கையான உள்ளடக்கங்களைக் கொண்ட கேசச் சாயங்களையே பயன்படுத்த வேண்டும்  எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.