ஐக்­கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள் தனது எழுத்­து­மூல அனு­ம­தி­யின்றி வெளிநா­டு­க­ளுக்கு செல்­லக்­கூ­டாது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடு­மை­யான பணிப்­புரை விடுத்­துள்ளார். 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் நேற்று அல­ரி­மா­ளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்­றது. இங்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார்.

இந்தக் கூட்­டத்தின் போது மத்­திய வங்­கியின் பிணை­முறி விவ­காரம் தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­துடன் அடுத்த கட்­ட­மாக எடுக்க வேண்­டிய நட­வ­டிக்கை குறித்தும் விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. 

மத்­திய வங்கி பிணை­முறி விசா­ர­ணையில் பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­கு­வது என்றும் தேவை ஏற்­படின் தானே நேரில் சென்று சாட்­சி­ய­ம­ளிக்க தயார் என்றும் பிர­தமர் இங்கு சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

கண்­டிக்­கான நெடுஞ்­சாலை தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்சை நிலைமை தொடர்பாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல இந்த கூட்டத்தில் விளக்கிக் கூறி யுள்ளார்.