பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால அட்டவணைப்படி நீர் விநியோகம் – மகாவலி அதிகார சபை!

04 Sep, 2026 | 05:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு நீர் வழங்கும் போது, விவசாயத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன அதிகாரிகளுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட விசேட கால அட்டவணைக்கு அமையவே நீர் விநியோகிக்கப்படும். மகாவலி நீர்த்தேக்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நீர்மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது குறித்து இலங்கை மின்சார சபையுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று மகாவலி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் எஸ்.சி காரியவசம் தெரிவித்தார்.

எல் நினோ தாக்கம் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைள் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்  வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

எல் நினோ காலநிலையினால் ஏற்படக்கூடிய நீர்ப்பற்றாக்குறை மற்றும் வறட்சி நிலைமைகளை எதிர்கொள்வதற்கும், மகாவலி வலயங்களில் நீர் விநியோகத்தை முகாமைத்துவம் செய்வதற்கும் மகாவலி அதிகாரசபை விரிவான திட்டங்களை வகுத்துள்ளது.

மகாவலி அதிகார சபையின் கீழ் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களான கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே, பொல்வத்தஉர மற்றும் மானம்பிட்டிய ஆகியவற்றின் நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கிடைக்கக்கூடிய நீர் இருப்பைக் கொண்டு, வரவிருக்கும் விவசாயப் பருவத்திற்குத் தேவையான நீரை மிகவும் கவனமாகப் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எல் நினோ காலப்பகுதியில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது, மகாவலி வலயங்களில் வாழும் மக்களுக்கு குடிநீர் விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்கே முதன்மை முன்னுரிமை வழங்கப்படும்.

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு நீர் வழங்கும் போது,விவசாயத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன அதிகாரிகளுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட விசேட கால அட்டவணையின்படியே நீர் விநியோகிக்கப்படும்.மகாவலி நீர்த்தேக்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நீர்மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது குறித்து இலங்கை மின்சார சபையுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வறட்சி தீவிரமடையும் பட்சத்தில், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக நீரைச் சேமித்து வைக்கும் பொருட்டு, நீர்மின் உற்பத்திக்காக நீர்த்தேக்கங்களில் இருந்து அதிகளவில் நீரைத் திறப்பது கட்டுப்படுத்தப்படும்.

மகாவலி வலயங்களில் உள்ள விவசாயிகள் நீர் விரயத்தைத் தவிர்த்து, நவீன நீர் முகாமைத்துவ முறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறைந்த நீரைக் கொண்டு அதிக விளைச்சல் தரக்கூடிய பயிர்களைப் பயிரிடுவது குறித்தும், வறட்சியைத் தாங்கக்கூடிய பயிரினங்களைத் தேர்ந்தெடுப்பது குறித்தும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வறட்சி அதிகரிக்கும் மாவட்டங்களில் உழவு இயந்திரங்கள் மற்றும் நீர் தாங்கிகள் மூலம் குடிநீரை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.இந்நிலையில் பொதுமக்கள் நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் விவகாரத்துக்கு உடனடித் தீர்வு...

2026-10-11 20:12:32
news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13
news-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 5,700 பேர்...

2026-10-11 16:04:31
news-image

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தைப் புனரமைக்க நடவடிக்கை...

2026-10-11 15:56:40