(இராஜதுரை ஹஷான்)
பிரதான நீர்நிலைகளில் நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளதால், நீர்மின் உற்பத்திக்கு அதிகளவில் நீரினைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபையிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பருவங்களில் விவசாயிகள் நீர் விரயத்தைக் குறைத்து, நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கும் கால அட்டவணை மற்றும் நீர் விநியோகத் திட்டங்களுக்கு அமைய பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.குறுகிய காலப் பயிர்கள் மற்றும் குறைந்த அளவு நீர் தேவைப்படும் பயிர்களைப் பயிரிடுவது குறித்து விவசாயிகள் அவதானம் செலுத்த வேண்டும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கித்சிறி வெலிகேபொல தெரிவித்தார்.
எல் நினோ தாக்கம் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைள் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
எல் நினோ காலநிலை இலங்கைக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் தொடர்ந்து அவதானித்து வருகிறது. எமது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள நீர்நிலைகளின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நீர் பயன்பாடு தொடர்பில் தொடர்புடைய சகல தரப்புகளுடளும் தொடர்ச்சியாக கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகிறோம்.
நாட்டின் பிரதான நீர்நிலைகளின் சராசரி நீர் கொள்ளளவு தற்போது 60 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை உள்ளது.இது கடந்த 2015-2016 ஆம் ஆண்டுகளில் நிலவிய எல் நினோ காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, ஓரளவுக்கு திருப்திகரமான மட்டமாகும்.
எதிர்பார்க்கப்படும் வறட்சியான காலநிலையைக் கருத்திற்கொண்டு, நீர்ப்பாசனத் திணைக்களம் நீர் விநியோகத்தில் மக்களுக்குத் தேவையான குடிநீர் விநியோகத்தைப் தடையின்றிப் பேணுதல், பெரும்போக விவசாய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்குக் தேவையான விவசாய நீரைத் திட்டமிட்டு வழங்குதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீர் மின்சார உற்பத்திக்குத் தேவையான நீரினை வழங்கும் போது மிகவும் கவனமாகச் தொழிற்பட வேண்டியுள்ளது.
பிரதான நீர்நிலைகளில் நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளதால், நீர்மின் உற்பத்திக்கு அதிகளவில் நீரினைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபையிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பருவங்களில் விவசாயிகள் நீர் விரயத்தைக் குறைத்து, நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கும் கால அட்டவணை மற்றும் நீர் விநியோகத் திட்டங்களுக்கு அமைய பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.குறுகிய காலப் பயிர்கள் மற்றும் குறைந்த அளவு நீர் தேவைப்படும் பயிர்களைப் பயிரிடுவது குறித்து விவசாயிகள் அவதானம் செலுத்த வேண்டும்.
நீர்நிலைகளின் நீர்மட்டம் தொடர்ச்சியாகக் குறையக்கூடும் என்பதால், பொதுமக்கள் வீடுகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் குடிநீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM