விடு­தலை புலி­களை அர­சியல் கைதி­க­ளாக அர்த்­தப்­ப­டுத்தி  விடு­தலை செய்­யக்­கோ­ருவோர் இரா­ணு­வத்தை  தண்­டிக்க கூறு­வது ஏற்­று­க்கொள்­ள­மு­டி­யாது. புலி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கு­வ­தென்றால் இரா­ணு­வத்தின் மீதான யுத்த குற்­றச்­சாட்­க்டு­க­ளையும்  மன்­னிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர்  இந்த விவ­கா­ரத்தில் ஒரு நிலைப்­பாட்­டினை கொள்ள வேண்டும் என பிவி­துரு ஹெல உறு­மய கட்­சியின் தலைவர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார். 

மாகாண முத­ல­மைச்­சரின் விருப்­பத்­திற்கு அமைய ஆளு­நரை நிய­மிக்கும் யோசனை ஒன்று புதிய அர­சியல் அமைப்பில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ள­தா­னது ஈழத்­துக்­கான அடித்­தளம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

பிவி­துரு ஹெல உறு­மய நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

ஜனா­தி­பதி வடக்­கிற்கு விஜயம் செய்த போது பார­ாளு­மன்ற உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் உள்­ளிட்ட சிலர் ஜனா­தி­ப­தியின் வரு­கை­யினை எதிர்த்து போராட்டம் நடத்­து­கின்­றனர். இதன்­போது அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­ய­வேண்டும் எனக்­கூறி போராட்டம் நடத்­து­கின்­றனர். ஆனால் இலங்­கையில் அர­சியல் கைதிகள் என யாரும் இல்லை என்­பதை நான் மிகவும் பொறுப்­புடன் தெரி­விக்­கின்றேன். 

இலங்­கையில் ஒரு காலத்தில்  அர­சியல் கைதிகள் இருந்­தனர், 1983 ஆம் ஆண்டு இலங்­கையில் ஜே.வி.பி, கொம்­யூனிஸ்ட் கட்சி, சம சமாஜ கட்­சி­களை தடை செய்த போது அதன் தலை­வர்­களை கைது­செய்து சிறையில் அடைத்­தனர். அவர்­களை அர­சியல் கைதிகள் என கூறி­னார் 

கள். அவர்கள் உண்­மை­யி­லேயே அர­சியல் கைதி கள்தான். அவர்­களை அவ்­வாறு கூறு­வதை ஏற்­று­க்கொள்ள முடியும். 

ஆனால் ஆயுதம் ஏந்தி இந்த நாட்டில் பிரி­வி­னை­யினை தூண்­டிய விடு­த­லைப்­பு­லிகள் பயங்­க­ர­வாத இயக்கம் இன்­று­வ­ரையில் தடை­செய்­யப்­பட்ட இயக்­க­மா­கவே உள்­ளது. இறுதி யுத்­தத்தில் பிடி­பட்ட புலிகள் இன்றும் சிறையில் உள்­ளனர். அவர்­களை அர­சியல் கைதிகள் என கூற­மு­டி­யாது. ஆயு­தத்­துடன் சர­ண­டைந்த 12 ஆயிரம் விடு­த­லைப்­பு­லிகள் புனர்­வாழ்வு வழங்­கப்­பட்டு இன்று சுதந்­தி­ர­மாக வாழ்ந்து வரு­கின்­றனர். 

அவர்­களை எமது அர­சாங்கம் விடு­தலை செய்­தது. ஆனால் இன்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு  உள்­ளிட்ட தமிழர் தரப்­பினர் சிறையில் தற்­போது தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள  ஆயுதம் ஏந்­திய விடு­த­லைப்­பு­லி­களை அர­சியல் கைதி­க­ளாக அர்த்­தப்­ப­டுத்தி அவர்­களை விடு­தலை செய்­ய­கூறி போராட்டம் நடத்­து­கின்­றனர். தொடர்ச்­சி­யாக அவர்கள்  இதே நிலைப்­பாட்டில் இருந்து கருத்து தெரி­வித்து வரு­கின்­றனர். மறு­புறம் இல்­லாத யுத்த குற்றம் ஒன்­றினை உரு­வாக்கி அதன் மூலம் இந்த நாட்­டினை காப்­பாற்­றிய எமது இரா­ணு­வத்­தி­னரை தண்­டிக்க வேண்டும் என்ற அழுத்­தத்­தி­னையும் கொடுத்து வரு­கின்­றனர். 

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு முதலில் ஒரு நிலைப்­பாட்டில் கருத்து தெரி­விக்க வேண்டும். ஒன்று யுத்த குற்­றத்தில் இரா­ணு­வத்தை தண்­டிக்க வேண்டும் என்றால், மறு­புறம் வடக்கில் ஆயுதம் ஏந்தி கொழும்­பிலும் அனைய பகு­தி­க­ளிலும் தாக்­குதல் நடத்தி பொது­மக்­களை கொன்ற விடு­த­லைப்­பு­லி­க­ளையும் யுத்த குற்­றத்தில் தண்­டிக்க வேண்­டுமா? அல்­லது விடு­த­லைப்­பு­லி­களை அர­சியல் கைதி­க­ளாக கூறி பொது மன்­னிப்பு வழங்­கு­வதை போலவே இரா­ணு­வத்­தையும் பொது மன்­னிப்பில் விட­வேண்­டுமா என்ற ஒரு நிலைப்­பாட்­டினை தெரி­விக்க வேண்டும். இரா­ணு­வத்தை மட்­டுமே தண்­டித்து விடு­தலை புலி­களை விடு­தலை செய்ய கோரும் கருத்து நியா­ய­மற்­ற­தாகும். 

மேலும் மாகாண முத­ல­மைச்­சரின் விருப்­பத்­திற்கு அமைய ஆளு­நரை நிய­மிக்கும் யோசனை ஒன்று புதிய அர­சியல் அமைப்பில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது.  எனினும் ஆளுநர் என்­பவர் ஜனா­தி­ப­தியின் மாகாண பிர­தி­நி­தி­யாவார். அவரை நிய­மிக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­தியின் கீழ் உள்­ளது. இது­வரை கால­மாக இந்த வழக்­கமே உள்­ளது.  எனினும் புதிய அர­சியல் அமைப்பில் இந்த அதி­காரம் முழு­மை­யாக முத­ல­மைச்­சரின் கீழ் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது.

இவ்­வாறு செயற்­ப­டு­வதன் மூலமாக   வடக்கு பிரதேசம் ஈழநாடாக பிரிந்துசெல்ல பிரதமர் வழிசமைத்துள்ளார். மாகாணசபை அதிகாரங்களை வழங்குகின்றனர், பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குகின்றனர், படிப்படியாக ஜனாதிபதியின் அதிகாரங்களை பறித்துக்கொண்டு மாகாண

சபை தன்னிச்சையாக செயற்படும் வகையில் அரசாங்கமே பாதையினை அமைத்துக் கொடுக்

கின்றது. இவற்றின் இறுதி ஈழமாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.