தயாரிப்பு : ஃபீனிக்ஸ் ஸ்டுடியோ
நடிகர்கள் : ஆண்டனி வர்கீஸ், ஐ. எம். விஜயன், ஜுமான்னா அப்துல் ரகுமான், பாலு வர்கீஸ் டேனிஷ் பி கே மற்றும் பலர்
இயக்கம்: நிகில் பிரேம் ராஜ்
மதிப்பீடு : 2/ 5
மலையாள திரையுலகம் புதிய புதிய கதை களங்களில் உணர்வுபூர்வமான விடயங்களை ரசிகர்களுக்கு வழங்குவதில் எப்போதும் முன்னிலையில் உள்ளது என்பதனை மீண்டும் நிரூபித்திருக்கும் திரைப்படம் தான் 7 ஸ்டார் பாய்ஸ்.
14 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதை பந்தாட்டத்தின் உள்ளூர் போட்டியின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வெகுஜன ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
கேரளாவில் ஆத்தங்கரை கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனான உமருக்கு சர்வதேச உதைப்பந்தாட்ட வீரரான மெஸ்ஸி மீது அளவு கடந்த பாசமும், பற்றும் உள்ளதால்.. அவரைப் போடவே பிரபல உதைப்பந்தாட்ட வீரராக வரவேண்டும் என எண்ணுகிறான். அவனுடைய லட்சியம், இலக்கு, வறுமை காரணமாக தடைபடுகிறது.
உமருக்கு உதைப்பந்தாட்டத்தில் விளையாடுவதற்கான உடற் தகுதி இல்லை என மறுக்கப்படுகிறது. இந்த தருணத்தில் உமர் தன் வயதை ஒத்த சிறார்களை ஒரு குழுவாக ஒன்றிணைத்து செவன் ஸ்டார் பாய்ஸ் எனும் உதைப்பந்தாட்ட அணியை உருவாக்குகிறான்.
இவர்களுக்கு உள்ளூர் உதைப்பந்தாட்டத்தில் நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வரும் இஸ்மாயில் ( அண்டனி வர்கீஸ்) உதவிக்கரம் நீட்டுகிறார். அத்துடன் இந்தியாவின் முன்னாள் உதை பந்தாட்ட வீரரான ஐ எம் விஜயனை வரவழைத்து பயிற்சிக்கும் ஏற்பாடு செய்கிறார் இஸ்மாயில்.
இதனால் உமறு பல தடைகளைக் கடந்து செவன் ஸ்டார் பாய்ஸின் அணியில் விளையாடும் வீரராக பங்கு பற்றுகிறார். இந்த அணி கோப்பையை வென்றதா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.
பொதுவாக இது போன்ற கதைகளில் பார்வையாளர்கள் எளிதாக யூகிக்கும் வகையிலான வகையில் உச்சகட்ட காட்சியை அமைக்காமல் வேறு வகையில் அமைத்திருப்பது தனி கவனத்தை ஈர்க்கிறது.
இஸ்மாயில்- ரஹீனா தொடர்பான காதல் காட்சிகள் இயல்பானதாக இருந்தாலும் திரைக்கதை நகர்விற்கு தன்னுடைய பாரிய பங்களிப்பை வழங்கவில்லை..
இந்தியாவில் கிராமப்புறங்களில் புல்வெளி மைதானத்தில் நடைபெறும் சிறார்களுக்கான உதை பந்தாட்ட போட்டி தொடர்பான காட்சிகள் நீளம் அதிகம் என்றாலும் ஓரளவு ரசிக்க முடிகிறது.
இந்த திரைப்படத்திலும் கிராம புறங்களுக்கே உரித்தான சுவர் அரசியல் குறியீடு இடம் பிடித்துள்ளது. ஒரு சுவற்றில் சர்வதேச அளவில் பிரபலமான கால்பந்தாட்ட வீரர்களின் புகைப்படம் இடம் பிடித்திருப்பது அந்த கிராமம் உதை பந்தாட்டத்தின் மீதான காதலை சொன்னாலும்... விளையாட்டில் நடைபெறும் அரசியலையும் மறைமுகமாக உணர்த்துகிறது.
உலகக் கோப்பை துடுப்பாட்ட போட்டியை ஆசிய நாட்டினர் குறிப்பாக தெற்காசியாவினர் தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்த அனுபவங்கள் உண்டு என்றாலும்... அதே அளவிற்கு உலகக்கோப்பை உதைப்பந்தாட்ட போட்டியை ஒரு கிராமமே ஆர்வத்துடன் அமர்ந்து நேரலையை பார்க்கிறது என்றால் புதிதாக இருக்கிறது.
இதுவும் வரவேற்கத்தக்க அம்சம் தான் இந்தியாவைப் பொறுத்தவரை கேரளம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரண்டு மாநிலங்களில் தான் துடுப்பாட்டத்தை விட உதைப்பந்தாட்டத்திற்கு ரசிகர்களும் வீரர்களும் அதிகம். இருந்தாலும் சிறார்களுக்கான உதை பந்தாட்ட போட்டி என்பதை மாயாஜாலத்துடன் இணைத்து இருப்பது ரசிக்க வைக்கிறது.
உமறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் டேனிஷ் பி கே நன்றாக ஓடி நடித்திருக்கிறார். இஸ்மாயில் கதாபாத்திரத்தில் தோன்றும் ஆண்டனி வர்கீஸ் தன் திரை தோற்றத்தை நிறைவாக வழங்கி ரசிகர்களை கவர்கிறார்.
இதுபோன்ற திறந்தவெளி மைதான விளையாட்டுகளுக்கு ஒளிப்பதிவு என்பது இன்றியமையாதது. அதில் ஒளிப்பதிவாளர் ரசிகர்களை எளிதாக வசீகரிக்கிறார். பின்னணி இசையிலும், பாடல்களிலும் மண்வாசம் மாறாமல் வீசுகிறது.
செவன் ஸ்டார் பாய்ஸ் - கோல்டன் பூட்




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM