தயாரிப்பு : பாவனா ஸ்டுடியோஸ் - பியூச்சர் ரன்னர் ஆப் பிலிம்ஸ்- ப்ரீமார்க் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள்: நிவின் பாலி, மமீதா பைஜூ, சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ரோஷன் ஷாநவாஸ், ஷியாம் மோகன் மற்றும் பலர்.
இயக்கம் : கிரிஷ் ஏ டி
மதிப்பீடு : 2.5 / 5
'பிரேமலு' என தென்னிந்திய ரசிகர்கள் கொண்டாடிய படைப்பை வழங்கிய இயக்குநர் என்பதாலும், நிவின்பாலி- மமீதா பைஜூ கூட்டணி என்பதாலும், பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
மேலும் இந்த திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்ற பிறகு, இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை மலையாள ரசிகர்களை போல் தமிழ் ரசிகர்களும் ஆதரவளித்தார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
பெத்லகேம் என்ற குடும்ப பெயரை கொண்டிருக்கும் கிறிஸ்தவ சமுதாயத்தின் உட்பிரிவைச் சார்ந்த ஜஸ்டின் ( நிவின் பாலி) இறந்த காதலியின் நினைவாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார்.
இவருடைய இளைய சகோதரர் ஜோயல்( சங்கீத் பிரதாப்) குறும்படம் ஒன்றை இயக்க திட்டமிடுகிறார். இதில் நடிப்பதற்காக இளம் பெண் ஒருவரை தெரிவு செய்து நடிக்க வைக்கிறார். அந்தப் பெண்ணிற்கு குறும்படத்தில் நடிக்க விருப்பம் இருந்தாலும்.. அவர்களுடைய குடும்பத்தினரின் அனுமதி இல்லை என்பதால் வீட்டிற்கு தெரியாமல் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்தப் பெண்ணை ஜோயல் காதலிக்கிறார். இந்நிலையில் ஜஸ்டினின் பக்கத்து வீட்டில் ஆஸ்லீ ( மமீதா பைஜூ) என்ற இளம் பெண் வருகை தருகிறார். இருவருக்குமான அறிமுகம் வலுவடைந்து, ஆஸ்லீவிற்கும் ஜஸ்டினுக்கும் காதல் உண்டாகிறது. ஆஸ்லீவிற்கும் தனக்குமான வயது வித்தியாசத்தை உணர்ந்து, உள்ளுக்குள் காதலித்தாலும் காதலை ஏற்றுக் கொள்ளாமல் மறுக்கிறார் ஜஸ்டின்.
ஒரு புள்ளியில் அந்த காதலை ஜஸ்டின் ஏற்க இந்தத் தருணத்தில் ஆஸ்லீயின் பெற்றோர்கள் அவரை அங்கிருந்து பிரித்து, வெளிநாட்டிற்கு செல் என நெருக்கடி கொடுக்கிறார்கள். அத்துடன் பைபிள் மீது சத்தியமும் செய்யச் சொல்கிறார்கள். சூழல் தந்த அழுத்தம் காரணமாக ஆஸ்லீ அதை செய்ய, இது ஜஸ்டினுக்கு தெரிய வர, ஜஸ்டின் மனம் உடைகிறார்.
இதற்குப் பின் இந்த காதல் என்ன ஆனது? என்பதையும், ஜோயலின் காதல் என்ன ஆனது? என்பதையும் இயல்பாக விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
கேரளாவில் வாழும் கிறிஸ்தவ சமுதாயத்தை சார்ந்த பெண்மணிகள் மது அருந்தி விட்டு அரட்டை அடிக்கும் காட்சி கவனம் ஈர்க்கிறது.
இயல்பான சம்பவங்கள், அதனூடாக மென்மையான நகைச்சுவைகள்... அதனூடாக காதல் உணர்வுகள்... என திரைக்கதை பயணித்தாலும், முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் தான் ரசிகர்களுக்கு சில சுவராசியமான அனுபவங்கள் கிடைக்கிறது.
அதிக வயது வித்தியாசம் கொண்ட காதலர்களின் கதை என்பதால் அண்மையில் வெளியாகி வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வேறு வெர்ஷனை பார்ப்பது போல் இருக்கிறது. ஆனால் மமீதா பைஜூ இந்த இரண்டு படத்திலும் கதையின் நாயகியாக நடித்திருந்தாலும் இரண்டு கதாபாத்திரத்திற்கும் இடையேயான வேறுபாட்டை துல்லியமாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்கிறார்.
ஜஸ்டின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிவின் பாலி வழக்கம்போல் தன்னுடைய திரை தோற்றத்தையும் திரை இருப்பையும் ஆளுமை செய்து ரசிகர்களை வசீகரிக்கிறார்.
நிலவியல் பின்னணி- அதற்கேற்ற ஒளிப்பதிவு- பின்னணி இசை என தொழில் நுட்ப அம்சங்கள் அனைத்து தரமுடன் அமைந்திருப்பதால் ரசிகர்களை பட மாளிகையில் அமர்ந்து படைப்பை முழுமையாக காண்பதற்கான உறுதியை வழங்குகிறது.
பெத்லகேம் குடும்ப யூனிட் - மலையாள மணம் வீசும் பூங்கொத்து.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM