இன்றைய சூழலில் இணைய தள வசதிகள் அதிகமாகிவிட்டதால் மக்கள் ஆன்மீகம், சோதிடம், இறைவழிபாடு தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
தங்களுடைய மனித வளத்தை துல்லியமான பாதையில் செலுத்தி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என திட்டமிடுகிறார்கள். இத்தகைய தருணத்தில் அவர்களுக்கு ஏழரை சனி என்ற சனி பகவானின் தாக்கம் ஏற்பட்டால், அதிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்து யோசிக்க தொடங்குகிறார்கள்.
இந்நிலையில் ஏழரை சனியின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சில குறிப்புகளை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழங்கி உள்ளனர்.
ஏழரைச் சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி, பாத சனி ,கண்டகச் சனி ஆகிய சனி பகவானின் பிடியில் சிக்கி இருக்கும் ராசியினர், பூசம் நட்சத்திர நாளில் அல்லது சனி பகவான் பிறந்த ரேவதி நட்சத்திர நாளில் உங்களுடைய வீட்டில் இருந்து மேற்கு திசையில் எந்த ஆலயம் இருக்கிறதோ, அந்த ஆலயத்திற்கு சனிக்கிழமை சென்று, தீபமேற்றி, 24 நிமிடங்கள் தியானித்து வந்தால் சனி பகவானின் தாக்கம் குறையும்.
அதே தருணத்தில் சனிக்கிழமைகளில் அல்லது துவாதசி திதி நாளில் எருமை மாட்டிற்கு அகத்திக் கீரையை பசியாறுவதற்கு வழங்கினாலும் சனியின் தாக்கம் குறையும்.
50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தால் ஏழரை சனியின் தாக்கம் குறைய கால பைரவர் வழிபாடு அல்லது ஜீவ சமாதி வழிபாட்டை தொடர்ந்து அதற்குரிய பிரத்யேக கிழமைகளில் மேற்கொண்டாலும் பாதிப்பு குறையும்.
முப்பது வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தால் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுடன் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களின் ஆலோசனையையும், வழிகாட்டலையும் பின்பற்றத் தொடங்கினால் ஏழரை சனியின் தாக்கம் குறையும்.
தொகுப்பு சுபயோக தாசன்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM