ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு: தமிழ்நாட்டு தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகள்!

Published By: P. Saranya

04 Sep, 2026 | 02:03 PM
image

உலகத் தமிழ் வர்த்தக சம்மேளனம் (World Tamil Chamber of Commerce - WTCC), தமிழ்நாடு அரசின் ஆதரவு மற்றும் ஒசாக்கா வணிக மேம்பாட்டு ஆணைக்குழு (OBDA) வழிகாட்டுதலுடன், தனது 13-வது சர்வதேச வணிக மாநாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் ஜப்பானின் ஒசாக்காவில் அமைந்துள்ள 'மைடோம் ஒசாக்கா' மையத்தில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் (MSMEs), ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில் தொடங்குவோர் இதில் பெருமளவில் பங்கேற்கின்றனர்.

இந்திய மற்றும் ஜப்பானிய நிறுவனங்களுக்கு இடையே வணிகக் கூட்டு, நேரடி B2B சந்திப்புகள், சர்வதேச வர்த்தக வாய்ப்புகள் மற்றும் ஜப்பான் சந்தையில் தொழில் விரிவாக்கம் செய்வதற்கான தளமாக இது அமையவுள்ளது.

வணிக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு வணிகச் சங்கங்களுக்கும் ஜப்பான் வர்த்தக அமைப்புகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகவுள்ளன.

தற்போது ஜப்பானில் பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறை நிலவி வருகிறது.  இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஜப்பானிய நிறுவனங்களின் குறிப்பிட்ட உற்பத்தி சார்ந்த வேலைகள் மற்றும் 'ஜோப்-வர்க்' ஒப்படைப்புகளைத் தமிழ்நாட்டிலுள்ள MSME நிறுவனங்களுக்கு 'அவுட்சோர்சிங்' (Outsourcing) முறையில் வழங்குவது குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

"இந்திய–ஜப்பான் இடையிலான வணிக உறவை மேலும் வலுப்படுத்தி, தமிழ்நாட்டுத் தொழில்முனைவோருக்குச் சர்வதேச அளவில் நிலையான வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதே இம்மாநாட்டின் முதன்மை நோக்கம்."  என உலகத் தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் செல்வகுமார் மற்றும் பொதுச்செயலாளர் குமரேசன் தெரிவித்துள்ளனர்.

இம்மாநாட்டில் பங்கேற்க விரும்பும் ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வணிகச் சங்கங்களின் பிரதிநிதிகள் உலகத் தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தொடர்பு வழிகள் மூலம் பதிவுசெய்து கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு +91 72999 92999 மற்றும் +60 16 616 7708 ஆகிய இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-10 16:29:35
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16
news-image

கொழும்பில் இடம்பெற்ற கேஷ் திரைப்பட நிறுவனத்தின்...

2026-10-07 13:02:02
news-image

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 70ஆவது...

2026-10-05 18:00:23
news-image

வளர்ந்து வரும் பாடகர்களுக்கு புதிய வாய்ப்பு

2026-10-05 10:26:46
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் முத்தமிழ்...

2026-10-05 10:10:43
news-image

திருகோணமலையில் தமிழ் சிங்கள அகராதி நூல்...

2026-10-04 10:10:01