(இராஜதுரை ஹஷான்)
பொலிஸ் மற்றும் நீதித்துறையில் சுயாதீனம் தொடர்பில் நாட்டு மக்கள் கேள்வியெழுப்பும் துரதிஸ்ட நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள் சக்தி தீர்மானிக்காது. சவால்களை சிறந்த முறையில் எதிர்கொள்வேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வெள்ளிக்கிழமை (04) முன்னிலையாகுவதற்கு வருகைத்தந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொலிஸார் அரசியல் அழுத்தங்களுக்கும், சலுகைகளுக்கும் அடிபணியக் கூடாது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.தற்போதைய பொலிஸ்மா அதிபருக்கு அந்த அறிவுரையை ஜனாதிபதி வழங்க வேண்டும். பொலிஸார் அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே செயற்படுகிறார்கள்.
பொலிஸ் மற்றும் நீதித்துறையில் சுயாதீனம் தொடர்பில் நாட்டு மக்கள் கேள்வியெழுப்பும் துரதிஸ்ட நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஒருபோதும் குற்றம் செய்யவில்லை. அதற்கான அவசியமும்; தோற்றம் பெறவில்லை.
எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள் சக்தி தீர்மானிக்காது. சவால்களை சிறந்த முறையில் எதிர்கொள்வேன். மக்கள் விடுதலை முன்னணியின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய போவதில்லை.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது, எவருக்கும் பாரபட்சம் காட்டப்படாது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் கொள்கலன்களை சட்டவிரோதமான முறையில் விடுவித்த தனது செயலாளருக்கு எதிராக ஜனாதிபதி உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM