(நெவில் அன்தனி)
மியன்மாரில் நடைபெற்றுவரும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளன (AFC) 20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றின் மேம்பாட்டுப் பிரிவில் கே குழுவில் பங்குபற்றும் இலங்கை தனது இரண்டாவது போட்டியில் மாலைதீவுகளிடம் 0 - 4 என்ற கோல்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

மியன்மாரிடம் முதலாவது போட்டியிலும் 0 - 4 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி அடைந்த இலங்கை, 20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணம் 2031க்கான தகுதிகாண் சுற்றிலும் மேம்பாட்டுப் பிரிவிலேயே போட்டியிடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய மாலைதீவுகள் அணி, போட்டியின் முதலாவது பகுதியில் கோல் போடுவதற்கு எடுத்த குறைந்தது நான்கு முயற்சிகளை இலங்கை கோல்காப்பாளர் கதாபி ஷஹீத் தடுத்து நிறுத்தி சக வீரரக்ளின் பாராட்டைப் பெற்றார்.

இதன் காரணமாக மாலைதீவுகளின் மொஹமத் சம்ஹான், அஹ்ஸாம் ரஷீத், அணித் தலைவர் மொஹமத் இலன் இம்ரான், நசாஹ் இப்ராஹிம் நசிர் ஆகிய நான்கு வீரர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
எனினும் இடைவேளைக்கு முந்திய உபாதையீடு நேரத்தின் 3ஆவது நிமிடத்தில் வொலி முறையில் மொஹமத் இம்ரான் கோல் போட்டு மாலைதீவுகளை முன்னிலையில் இட்டார்.

இப் போட்டியில் இலங்கை அணி தடுத்தாடும் உத்தியுடனேயே விளையாடியது.
இடைவேளைக்குப் பின்னர் 60ஆவது நிடமிடத்தில் மாலைதீவுகளின் 2ஆவது கோலை ஷம்ஹான் புகுத்தினார்.
இலங்கையின் பின்கள வீரர் மொஹம்மத் புவார்ட் பரிக் 8 நிமிட இடைவெளியில் (56 நி., 64 நி.) இரண்டு மஞ்சள் அட்டைகளுக்கு இலக்காகி சிவப்பு அட்டையுடன் களம் விட்டு வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து போட்டியின் 78ஆவது, 80ஆவது நிமிடங்களில் இம்ராஹிம் நசிர் 2 கோல்களைப் போட்டு மாலைதீவுகளை இலகுவாக வெற்றி அடையச் செய்தார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM