ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 15 மாத தடைக்குபின்னர் திரும்பிய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

சீனாவில் இடம்பெற்றுவரும் டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் முன்னாள் வீராங்கனை மரியா ஷரபோவா பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை எதிர்கொண்டார்.

ஆரம்பத்தில் 1-4 என்ற புள்ளிக் கணக்கில் பின்தங்கினாலும்இ அதன் பின்னர்  சரிவிலிருந்து மீண்டு 7-6இ 7-6 (10-8) என்ற நேர் செட்களில் அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை கைப்பற்றினார்.

 

கடந்த ஏப்ரல் மாதம் ஊக்கமருத்துத் தடைக்கு பின் களத்திற்கு திரும்பிய ஷரபோவா வென்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். அத்துடன் 36 சர்வதேச பட்டங்களை வென்றிருக்கும் ஷரபோவா ஐந்து முறை கிராண்ட்ஸலாம் பட்டங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.