தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில்இ 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 1.96 உயரத்தைத் தாவிய புதிய சாதனையுடன் கல்கிஸை புனித தோமஸ் கல்லூரியைச் சேர்ந்த வி. கஸ்தூரியாரச்சி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதேவேளை, 1.93 மீற்றர் உயரத்தைத் தாவிய சிலாபம் சவரான முஸ்லிம் வித்தியாலத்தைச் சேர்ந்த ஏ.எம் அப்ரிட் வெள்ளிப் பதக்கத்தையும் 1.93 மீற்றர் உயரத்தை தாவிய நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த சானுக பெர்ணான்டோ வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.